நடப்பு
நடப்பு :-
கொட்டிய வீதிகளில்
நடந்து கொண்டிருந்தேன்...
கால்களின்
களைப்பை தவிர்க்க
காதுகளில் பாடல்
ஒலிக்கவில்லை...
உடன்வந்து
உரையாட
உற்றத் துணை
ஏதுமில்லை...
வானம்பார்த்து
விழிகள் வியக்க
வெளிச்சமது
இல்லவேயில்லை...
கணங்கள் உருண்டதில்
கவனம் கொள்ளாது
வியர்வை வழிய
வீதிகளெல்லாம்
கடந்து நடந்து
வந்துவிட்டேன்
காதல் உன்னைமட்டும்
உள்ளமதின்
உள்ளேதாங்கி.
Comments
Post a Comment