மழையும் நீயும்

மழையும் நீயும் :-



திடீர் திடீர் 
என மழை வருகிறது 
இந்நாட்களில் 
திடீர் திடீர் 
என வருகிற
உன் நியாபகம் போல...

பொழிகிற மழையை 
உற்று கவனித்தேன் 
உன்னை கவனிப்பதைப் போலவே...

விட்டு விட்டு 
பொழிகிறது மழை  
விட்டு விட்டுப்  
என்னைப் பார்க்கிற 
உன் திருட்டுப்பார்வை போல...

முதலில் 
அசுர வேகத்தில் 
அழுத்துகிறது நிலத்தை 
நிலம் எதிர்க்க 
எத்தனிக்கையில் 
அன்பாய் அழுத்தம் 
குறைக்கிறது 
உன் பார்வையும் இப்படித்தான்...

முடிவில் 
இன்னும் பொழியாதா 
என நிலம் 
ஏங்கத் துவங்கையில் 
பொழிப்பை நிறுத்தி 
போய்விடுகிறது மழை
பல்லிழித்துக்கொண்டு
உன்னைப்போலவே.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔