எது கலாம் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மை அஞ்சலி??.

நேற்று ஊடகம் முழுவதும் ஓரே செய்திதான். முகநூல் நிரம்பி வழிந்தது கலாம் அவர்களைப் பற்றிய செய்திகளால். துயரத்திலும், கொஞ்சம் நிறைவாகவும் இருந்தது எல்லோரும் அவர் இழப்பை உணர்ந்திருப்பதையெண்ணி. ஒரு கூட்டம் அவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. இன்னொரு கூட்டம் அலுவலகத்துக்கு விடுப்பு அறிவிக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்தது. இன்று ஒரு தோழி கவிதையெல்லாம் முடிஞ்சுதா? என்று கேட்டிருந்தார்.போகட்டும், வேடிக்கை மனிதர்கள். கலாம் குறித்த நிகழ்வுகள் தவிர்த்து யாகூப் மேமனை என்ன செய்யலாம் என்ற விவாதமும், எம். பி க்களுக்கான சப்சிடி குறித்த விவாதமும் ஓடிக்கொண்டிருந்தன. இன்னொரு தொலைக்காட்சி கலாம் அவர்களுடைய நேர்காணலில் தலைமைப்பண்புகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை திரும்பத் திரும்ப யாருக்கே உரைக்க வேண்டி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் பல கோடீஸ்வரர்கள் கல்வி மற்றும் சிறந்த வாழ்வியல் சூழலுக்காக இந்தியாவைத் துறந்து இரண்டாம் நிலை குடிமக்கள்களாக வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக...