ஒற்றைக் காதல் மட்டும் போதுமென!!!?



சிறு பிராயத்தில்
வீட்டின் புறக்கடையில்
சிறிதாக ஓடிய
சின்னக் கால்வாயில்
அவளோடு
கால்நனைத்து
விளையாடியிருக்க வேண்டும் நீங்கள்

வெயிலில் விளையாடி
கருத்த தேகமாய்
கால்சட்டை அணிந்து
காதலோடு பள்ளி சென்றபோது
வெள்ளைநிற மல்லிகை போலிருந்த
அவளோடு வகுப்பறை சிநேகிதனாய்
இருந்திருக்க வேண்டும் நீங்கள்

ஆறாம் வகுப்பில்
அடுத்தத்தெரு மதினியார் வீட்டில்
ஆங்கிலம் பேசும்
அவளைப்பார்த்து
ஆச்சர்யத்தில்
பேந்த பேந்த
விழித்திருக்க வேண்டும் நீங்கள்  

கல்லூரியில்
கனவு பதிக்க நுழைந்தபோது
காற்றுவிளையாடும்
கவின் கூந்தலை வருடியவாறு
அவள் வருவதை தினம்
கவனித்திருக்க வேண்டும் நீங்கள்

அலுவலக அதிர்வில்
அத்தனை இருளில்
ஒளிபூத்த அறிவு ரோஜாவாக
அவள் மட்டும் ஒளிர்வதை
தரிசித்திருக்க வேண்டும் நீங்கள்

இப்படி
ஏதும் தெரியாது
ஏக்கங்கள் புரியாது

எப்படி சொல்லலாம் நீங்கள்
இந்த உயர் வாழ்வில்

ஒற்றைக் காதல் மட்டும் போதுமென!!!?

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔