முத்தம்
அந்த முத்தத்தை
ஸ்பரிசித்து
முவிரண்டு மாதங்களாகிறது
அடிக்கடி அழைக்கையில்
அலைபேசியில்
இடப்படுகிறது
ஆழமாக முத்தங்கள்
காற்றில் கரைந்திருக்கும்
அலைவரிசைகள்
அழைத்து வருகின்றன
முத்தத்தை ஓசையாக
அன்பு அழுத்துகையில்
புகைப்படங்கள்
பெறுகின்றன
அழுத்தமாக
முத்தங்களை
பகிரப்படும்
குவிந்த உதடுகளின்
படங்கள்
பல சமயங்களில்
உள்ளத்தை நனைத்தாலும்
உதடும் உடலும்
ஒன்றிணைந்த முத்தம்
விரைவில் கிட்டும்
என்கிற நம்பிக்கை மட்டும்
இன்னும் ஈரமாக
வைத்திருக்கிறது
இதயத்தையும்
இதழ்களையும்
எங்கோ தள்ளி
பிழைக்க வந்தவனுக்கு!
Comments
Post a Comment