சர்வர்
முதல் மேசைக்கு
ஒரு தோசை
நாலாம் நம்பருக்கு
இரண்டு பரோட்டா
ஒரு டீ
மூணாம் நம்பருக்கு
தண்ணி வைப்பா
ஐஞ்சாம் நம்பர் மேசைக்கு
பில்லப் போடு
ஆறாம் நம்பரக்
சீக்கிரம் கிளீன் பண்ணு
ஆளு வெயிட் பண்ணுது
ஆர்டர் பண்ணி
எவ்ளோ நேரமாச்சு
என்னய்யா பண்ணுறீங்க!
காப்பில சக்கரை அதிகம்
வேற கொண்டு வா!
பகலிரவன்றி
பரபரக்கிற
வேலைக்கு நடுவில்
கழிப்பறைக்கும்
கை கழுவுகிற இடத்திற்கும்
இடையிலான சிறு
இடைவெளியில்
மறைந்திருந்து
வேக வேகமாய்
உண்ணுகையில்
காணக்கிடைக்கிறது
சர்வராய் பிழைப்பவனின்
சாபம்.
Comments
Post a Comment