எண்ணற்ற சாத்தான்கள்
அறைக்கதவுகள்
இறுக்கமாக
அடைக்கப்பட்டு
தாழிடப்படுகின்றன
ஜன்னல்களுக்கும்
அதே சூத்திரம் தான்
அடைபடும் சாத்திரந்தான்
விளக்குகள் அணைக்கப்பட்டு
இருளை கிழிக்கும்
மெல்லிய ஒளிநீட்சி மட்டும்
அனுமதிக்கப்படுகிறது
தனியுருவமோ
முகத்தில் மயிர்கள் பூத்த
பல உருவங்களோ
அமைதியை அணிந்துகொண்டு
காத்திருக்கின்றன
திரை ஒளிர்கிறது
காட்சி விரிகிறது
மெல்ல வெளிவருகிறன
இருளிலிருந்து எட்டிப்பார்த்து
எண்ணற்ற சாத்தான்கள்
தொடர்கிறது அந்த நீலப்படம்!.
Comments
Post a Comment