முப்பத்தியோரு வருட உடம்பு



மிளகுகூடி
மீந்த ரசம்

மிடுக்காய் 
நடைநடந்து 
வாங்கிவந்து 
வாய்ருசித்த பிரியாணி

மூன்று நாள்  
முடக்கத்தின்
முற்போக்கு விளைவு

அறையை 
அணையாது குளிர்விக்கும் 
அறை குளிர்விப்பான்

அம்மைக்கும் அப்பனுக்கும் 
ஐம்பதில் வாய்த்தது 
அவசரகதியில் 
அறிமுகமாதல்

தனித்திருத்தல் 
தவித்திருத்தல் 
தந்துள்ள 
பசலை மயக்கம் 

இவற்றுள் எது காரணமோ

துர்மரணக் கனவுகளாய் 
துரத்தி வந்து குழப்புகிறது 
மூன்றொரு நாளாய் குணக்கும்

முப்பத்தியோரு வருட உடம்பு.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔