கனவுகளின் இலட்சியம்





தொடக்கமும் முடித்தலுமின்றி
தொடங்கி முடித்தல் 
சூத்திரம் மறத்தல்
கனவுகளின் இலட்சியம்

விரும்பியவை விரும்பாது
விரும்பாதவை விரும்பச் செய்தலும்
விட்டு ஓடாதிருத்தலும்
கனவுகளின் இலட்சியம்

எண்ணங்களின் பிரதிபலிப்பா
ஏக்கங்களின் பரிதவிப்பா
ஏதும் தெளியாது கடத்தலும்
கனவுகளின் இலட்சியம்

தூக்கம் கலைத்தல்
துடித்து எழச்செய்தல் மீண்டும்
தூங்க வற்புறுத்தல்
கனவுகளின் இலட்சியம்

ஆழ்மன எச்சங்கள்
அதிரவடித்து
அம்மணமாக்கி
அறிவுறச் செய்தலும்
கனவுகளின் இலட்சியம்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔