மயல்
சிவராமன் ஜீ , வணக்கம். மயல் வாங்கி ஓரிரு வாரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன். சோம்பேறித்தனம் காரணமாக உடனே உங்களுக்கு எழுத முடியவில்லை. ஒரு கவிதையோ, கதையோ, நாவலோ, திரைப்படமோ எதுவாகினும் பார்க்கின்ற, படிக்கின்ற பொழுதில் மெல்ல ஆட்கொண்டு, சகலத்தையும் மறந்து பிணைத்துக் கொள்ளவேண்டும். நான் வைத்திருக்கும் ஒரு சிறு விதி ஒரு நல்ல கலைப்படைப்புக்கு அதுதான். வெகு நாட்களுக்குப் பிறகு நான் படித்த தமிழ் நாவல் மயல். எனது மேல்சொன்ன விதி வழி மயல் இருந்தது. நன்றிகள் உங்களுக்கு. ஆரஞ்சு வண்ண அட்டை நிறத்தில் இருக்கின்ற பச்சை நதி உங்கள் நாவல். பரந்து விரிந்ததும் கூட!. திருநெல்வேலியில், சுத்தமல்லி என்கிற கிராமத்தில் அக்கிரஹார வாசனையில் நானும் கொஞ்சம் வளர்ந்திருந்த காரணத்தினாலோ என்னவோ, எனக்கும் ஒரு சுரேஷய்யரைத் தெரியும். ஷ்யாமாவைத் தெரியும், ஒரு கிருஷ்ணாவைத் தெரியும், ஒரு நிலாவையும் கூட. எல்லா அக்கிரஹார கதைகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் போல. சீயக்காய், ponds பவுடர், தேங்காயெண்ணெய் என நீங்கள் ஆரம்பித்ததும் அடடா இது நம்ம ஏரியால்ல என்று மனம் ஒட்டிக்கொண்டது. சமையல் வல்லுனரான ஒரு மஹாதேவய...