Posts

Showing posts from May, 2015

நண்பன்

Image
எனக்கு ஒரு நாயினை நண்பனாக   சில தினங்களாகத் தெரியும்  நான் வீதிவருகையில்  வாலாட்டி  வணக்கம் செய்வதுபோல் எழுந்துநின்று   தலையசைக்கிற   அவ்வப்போது நான்  அளிக்கும் அதீத உணவுகளை  உண்டு முடித்ததும் உணர்வாய் உரசி நிற்கிற   ஒரு நாயினை நண்பனாக எனக்கு    சில தினங்களாகத் தெரியும்  நான் வெற்றுக்கையுடன்  திரும்பும் தினங்களில்  ஒட்டிய வயிறுடன்  காத்திருந்தாலும்  உணர்ச்சி விதும்பி  கோவம் கொள்ளாத சமயங்களில்  சத்தமாக கத்திமுடிக்கையில்  குரைத்து எதிர்க்காத  நான் நாயென்று சொல்லக்  நா கூசுகிற  என்போல் நாய்க்குணமில்லா   ஒரு நல்ல நண்பனை  எனக்கு சில தினங்களாகத்  தெரியும்.

பூனைகளுலகம்

Image
வெளியிருந்து  வீடு நுழைகையில்  வளர்ந்தவாலைச் சுருட்டி வராண்டாவில் படுத்திருக்கிறது  கரியபூனை ஓன்று  இருப்பதே தெரியாதவாறு  வாழ்வில் என்னிலையை  நினைவுபடுத்துதல் போல  ரேடியக் கண்களை  உருட்டி உருட்டி  பார்க்கிறது பூனை  என்னைத்தான் பார்க்கிறதென நானும்  என்கையிலிருக்கும் பையிலிருப்பதென்ன  என அதுவும் நினைப்பதுவும் கன்னியர் பின்னழைந்த  கடந்த காதல் வாழ்வினை  கணநேரத்தில் கடத்துகின்றன  படியேறி நுழைகையில்  இறங்கி வருகிற இன்னொரு  சாம்பல்நிறப் பூனை  சட்டென நெட்டிமுறித்து  சப்தமின்றிச் சிரிக்கிறது என்னைப்பார்த்தா  என் வாழ்வைப் பார்த்தா  என பதறுகையில்  திறக்கிறது  தாளிட்ட கதவு தானாக காலடியில் இன்னுமொரு பூனை  ஒளிர்கின்ற கண்கள்  உயர்ந்த காதுகள்  உள்ளடங்கிய உதடுகள்  சிலிர்த்து விரிந்த மீசைமயிர்கள்  சின்ன மூக்கு  செதுக்கியதுபோல் பஞ்சுமுடிகள்  பூனைகள் ஏன் செல்...

புத்தனாவது கடினம்

Image
செய்ய ஒன்றுமில்லா சிந்தனைப் பொழுதுகளில் நின் நினைவற்று மூளை கசக்கி முயன்றது முடித்தலே பெரும் பிரயத்தனம்தான் அன்றொருநாள் நளனாக நினைத்து நல்லபடி சமைத்தேன் நன்கு உண்டேன் உறக்கம் கொள்ளுகையில் உன்நினைவு கொன்றது பிறிதொருநாள் உழைப்பில் பிணைந்து தொலைந்து பின்னிருக்கை அமர்ந்து பேரூந்தில் பயணிக்கையில் சகபயணி தீண்டல் சட்டென நின் நினைவைத் தந்தது மணிக்கொரு கனமாய் மூளை மயக்கம் கொள்ளுகையில் மயங்கிக் கொள்கிறது கண்ணில்பட்டு - கிட்டே கடக்கையில் மறையும் கானல் நீர்போல் நிந்தன் நினைவு தியானத்தில் ஒருபொருள் தீர்மானித்து உச்சி குவிக்க சொன்னதும்  உடனே உன்முகம் தீர்மானித்து என்சொல் மறுக்கிற இதயம் தொலைக்க செத்துத்தான் பிறக்கவேண்டும் நின் சிந்தனை தொலைக்க!! இனி நான் புத்தனாவது இயலாத கடினம்!

காறிய எச்சில்

Image
கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தியியைத் எனக்குத் தெரியும் அடிக்கடி அவளை அர்த்தமின்றி காறிஉமிழும் கரிய உலகத்தின் பெரும்பகுதியையும் தெரியும் நல்லவிதமாய் எனை நாளும் பாதிப்பதால் நாசுக்காய் தள்ளியிருந்து நன்றாய் அவளை கவனிப்பதை நல்அலுவலாய்க் கொண்டிருக்கிறேன் அன்றொருநாள் அந்திமப்பொழுதில் ஆண்சட்டை அணிந்து அழகாய் இருந்தாள் அவ்வளவுதான் காறிஉமிழத் தொடங்கியது காழ்புணர்ச்சி தாளாத கரிய உலகம் புதல்விகளின் புரிதலால் புதிதாய் அணிவதை பொட்டோடு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அவள் உடையவன் உலகத்திலிருந்து தொலைந்தாலும் உள்ளத்தில் தொலையாததும் காரணமாயிருக்கலாம் காறி உமிழ்தல்கள் கண்மறை பேச்சுகள் தொடர்ந்தன மகளின் திருமணத்தில் மங்கலம் கருதி மறைந்திருக்க பணித்தது சாத்தான்களின் கூடாரமான கரிய உலகம் கொதித்து வசைமாரிப் பொழிந்த ஆண்ம மகள்களால் கொண்டாட்டம் தொலைத்தது மனிதர்கள்  உருவில் மடையராய் நடமாடும் கரிய உலகம் இல்லவனின்றி இறுக்கும் உள்ளுலகம் சுருக்கும் வெளியுலகம் என்ன செய்வாள் எனக்குப் மிகப்பிடித்த கைம்பெண்ணாம் அவள் தலைகிறுகிறுக்க கொலைவெறி...

தொலைந்த நகை

Image
நேற்று பேரூந்துப் பயணத்தில் சக பயணி ஒருவன் சத்தமாக வாய்விட்டுச் சிரிப்பதைப் பார்த்தேன், கேட்டேன் அவனை விட்டுவிட்டு அவன் சிரிப்பை நோக்குகையில் வயிறு சுருங்கி தொண்டை புடைக்க கண்ணீர் வழிய சுற்றம் பற்றிய சுரணையின்றி சுடச்சுட அரங்கேறிக் கொண்டிருந்தது அந்தச் சிரிப்பு எவ்வளவு நாளாயிற்று இப்படி சிரிப்பதை பார்த்து? இப்படி சத்தமாகச் சிரித்து? ஏன் இப்போது இப்படி சிரிப்பதேயில்லை? பொன்னகையை நிரப்ப எத்தனிக்கும் நான் புன்னகையை இழந்திருக்கிறேனே? கேள்விகள் குவிய இறங்குமிடம் மறந்து பேரூந்தின் போக்கில் போய்க்கொண்டிருந்தேன் நகைப்பை மறந்து நாட்கள் நகர்வதுமாதிரி ஒருவேளை நான் மெல்லச் சிரிக்கும் மேல்தட்டு வர்க்கமோ?! - இல்லை வாய்க்குள்ளேயே சிரிக்கும் வசதி வர்க்கமோ?! சென்றவருடம் நண்பன் ஒருவன் நக்கல் செய்கையில் நகைத்ததாக நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை! வளமான வாழ்தல்! எப்போது வருமோ இந்த வருட கோட்டா?! விதை செடியாகி விருட்சமாகையில் என்ன இழக்கும்? ஏன் இழக்கும்? என்போல் இழக்குமா? பதில்கள் தேடி பல நேரம் பயணித்து சிரித்து கெடுத்தவனிடமே! சிந்தனை தேடி வந்தே...

கண்களின் உடல்கள்

Image
ஊரில் திருவிழா  நடந்து கொண்டிருந்தது  அங்கே படையலும் நிரம்ப  இருந்தது  கலயங்களும் நிரம்ப  குழுமியிருந்தன  கஞ்சி பருக  காத்திருந்த கண்களும்  நிரம்ப குழுமியிருந்தன  பூசை முடிந்ததும்  பூசாரி மணியடிக்க  கலயங்களை கைப்பற்ற  கண்களின் உடல்கள்  முண்டியடித்து முயன்று கொண்டிருந்தபோது  உடலின்  கண்கள் மட்டும்  காலிபண்ணி கொண்டிருந்தன  கலயங்களை  எட்ட நின்றவாரே!!! 

மரப்பல்லி

Image
எனதறையில் அலைகின்ற ஒரு அழகு மரப்பல்லியிடம் உனைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தேன் நீ அடிக்கடி சண்டையிடுவதாய் சொன்னேன் வாலாட்டி ஒரு வினோத ஒலியினை எழுப்பியது நீ அடிக்கடி மௌனிப்பதாய் சொன்னேன் மறுபடியும் வாலாட்டி அந்த வினோத ஒலியினை எழுப்பியது நீ எப்போதும் உண்மை பேசுவதேயில்லையெனச் சொன்னேன் அதே வாலாட்டல் அதே வினோத ஒலி நீ கொஞ்சம் சுமாரான அழகியெனச் சொன்னேன் வாலட்டலின்றி வினோத ஒலி மட்டும் நான் உன்னை காதலிப்பதாயும் சொன்னேன் சுவற்றிலிருந்து தொப்பென விழுந்தது மரப்பல்லி வாலட்டலுமில்லை வினோத ஒலியுமில்லை. புவிவாழும் இப்பிராணி பூகம்பத்தை வரும்முன்பே உணருமாம்!!

சுவரொட்டிகளை பிடிப்பதில்லை

Image
எனக்கு சுவரொட்டிகளை  கண்டாலே பிடிப்பதில்லை  அறிவற்ற  அடிவருடிகளின்  அசுத்தப்படுத்தும்  அருவறுப்பான  சுவரொட்டிகளை  கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை நேற்று அந்தச் சுவற்றில்  ஒரு மரம்  ஒரு மான்  ஒரு நிறைந்த கானகம்  ஒரு ஒழுங்கான அழகுடன்  உயிரோடிருந்தது  இன்று?  நேற்று  மேம்பாலத்தில் நின்று  கீழ் செல்லும் வாகனம் ரசிக்கலாம்  கீழே எறும்புபோல் ஊர்கின்ற  மனிதர்கள் ரசிக்கலாம்  அகண்ட வானினினை  அலையும் மேகந்தனை அமைதியாய் ரசிக்கலாம்  இன்று? சாலையில் ஒருபுறமாகச் செல்கையில்  மறுபுற மனிதர்களின் செய்கைகளை மந்திரமாய் விரையும்  கணங்களை மறைத்து  மடத்தனத்தின் சாட்சியாக நிற்கும்   இந்தச் சுவரொட்டிகளை கண்டாலே பிடிப்பதில்லை ஒட்டுபவனின்  உருவாக்குபவனின்  கைகளுக்கு  கவள உணவளிக்கும்   இந்த சுவரொட்டிகள் என்பது தவிர்த்து அறிவற்ற  அடிவருடிகளின்...

தடை செய்யப்பட்ட கவிதைகள்

Image
நான்  எழுதி பகிராத  எண்ணற்ற  தடை செய்யப்பட்ட கவிதைகள்  என்னிடத்தில்  குவிந்து கிடக்கின்றன அவை பெரும்பாலும் நாம் பகிர்ந்துகொண்ட  உடலைப் பற்றியதாயிருக்கின்றன  நீ பகிராத உன்னுடலைப் பற்றியதாயும்  இருக்கின்றன  இருநீர் உண்ட  இருதயம் சுண்ட  நினைவுகள் பின்னிக்கிடக்கும்  நிம் பிறப்பின் ரகசியங்கள்  நிறைந்தவை அவை  காமம் கொப்பளிக்கும்  கனவில் நானும் நீயும்  நிகழ்த்துவதாய்  நான் மட்டும் கண்ட  சொப்பன குவியல்கள்  நிரம்ப உண்டு  அவற்றில்  உன் உதட்டுக் குவிப்பின்  ஓரங்களிலிருந்து  கால்நகக் கணிப்புவரை வரலாற்று வர்ணனைகள்  வரியோடிக் கிடப்பவை அவை   தூய ஆடை  அணிந்துகொண்டு துப்புறவு உடல்கொண்டு   அழுக்குமனதுடன்   நாம் அலைந்த தினங்கள்  அடுக்கப்பட்டுள்ளன வரிகளாய்  அக்கவிதைகளில்  என்பாதி நீயென  உன்பாதி யாரென  உணர்ந்துகொள்ள   ...

ஒற்றை வியர்வைத் துளி

Image
அறைக்குளிர்விப்பான் அணைந்ததும் அதிரடியாய் எட்டிப்பார்த்தது அந்த ஒற்றை வியர்வைத் துளி ஓராயிரம் துளிகளாய் ஒன்றுகூடி வழிகையில் எங்கிருந்து தோன்றியிருக்கும் அந்த முதல் ஒற்றைத்துளி எனக் கேள்வியாய் வழிகிறது சிந்தனை "நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த" எனுமொரு உழைப்பு குறித்த முதுமொழி மூளை நிரப்ப கேள்விகள் வரிகளாக கொழுப்பு கரைய பெருகும் வியர்வை போல் சிந்தனை கரைய நிரம்புகிறது கவிதை அணைந்த அறைக் குளிர்விப்பானுக்கு அத்துணை நன்றிகள் கொஞ்சம் கொழுப்பைக் கரைத்து எழுத்தை குவித்தமைக்கு!!!

இரண்டு வாக்கியங்கள்

Image
இருவருடங்களுக்கு  பிறகு இசைந்த குரல் அது இரண்டு வாக்கியங்கள் இசைந்திருந்தாள் அவள் மூன்றாவதாக ஆயிர அர்த்தம் கடத்திய - ஒரு அரைநொடி மௌனம் முதலில் உதித்தது "நான் நல்லா இருக்கேன்" என்பது அதில் "என்ன பேசவேண்டுமென்பது" இரெண்டாவது வாக்கியம் இந்த இரெண்டு வாக்கியங்கள் இருவருட இடைவெளியை நிரப்பும் என நினைக்கிறேன் நிரப்பியதுபோலவும் தெரிகிறது நாட்களின் கோர்வையாகி நசிந்த வருடங்களை இந்த வாக்கிய கோர்வையால் வளமாக்க வேண்டும் இந்த இரு வாக்கியங்களை திரும்பத் திரும்ப என் மனதிற்குள் அனுப்புகிறேன் எதிரொலியாய் பேசிக்களித்த எல்லா நினைவுகளையும் கிளர்ந்து வந்து   எனக்குள் மறுபடியும் சேர்க்கிறது   இன்னும் இருவருடம் காத்திருந்து இரெண்டொரு வாக்கியங்கள் நான் கேட்க அவள் உதிர்க்கவேண்டும் ஒவ்வொரு சொல்லாக சில மாதங்களும் ஒவ்வொரு எழுத்தாக பல மாதங்களும் அவள் குரலின் ஒலியோடு நினைவுகூர்ந்தால் இரெண்டொரு வருடம் இப்படியென்பதற்குள் கழியலாம் ஏனிந்த ஆயுளேகூட. 

இன்று தீர்ப்பு வந்திருக்கிறது

Image
இன்று தீர்ப்பு வந்திருக்கிறது  சிலர் அகமகிழ்ந்திருக்கிறார்கள்  சிலர் மனமுடைந்திருக்கிறார்கள்  சிலர் என்ன நடக்கிறதென்றே தெரியாதிருக்கிறார்கள்  அவர்கள்தான் பெரும்பாலும்  தேர்வும் செய்கிறார்கள் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது இங்கு கொலைசெய்து தப்பிக்கலாம்  இங்கு கொள்ளையடித்தும் தப்பிக்கலாம்  இங்கு பணமிருந்தால், பதவிகள் இருந்தால்  யமனையும் தின்று ஏப்பம் விட்டும் தப்பிக்கலாம். இன்று தீர்ப்பு வந்திருக்கிறது இங்கு மாரி பொய்த்திருக்கிறது இங்கு மணல் மரித்திருக்கிறது  இயற்கையை சுரண்டி  இரப்பையையும் நிரப்பும்  கூட்டங்கள் மட்டும் கொழித்திருக்கிறது இன்று தீர்ப்பு வந்திருக்கிறது இனிமேல் சட்டத்தில் கிறுக்கலாம்  இனிமேல் சாத்திரத்தை ஏறக்கட்டலாம்  சாமான்யனை ஏறி மிதித்து  தினம் சாகடிக்கலாம்  இன்று தீர்ப்பு வந்திருக்கிறது எங்களுக்கான தீர்ப்பு  இனி என்றும் எழுதப்படபோவதேயில்லை  என்று உறுதியாக நினைக்கச் செய்யு...

07/05/2015 ன் மாலை

Image
மூக்கின் அருகே வீசுகிறது  புல்லிலிருந்து பிரிந்து  காற்றில் கரைகின்ற வாசம்  சற்று தள்ளியிருக்கும்  காதின் அருகே  ரீங்காரமாய் இசைக்கிறது கூட்டிலிருந்து கிளம்பிவந்து கூதுகலமாய் பறக்கின்ற குட்டி ஈயின் இறக்கைகள்  சாரையாய் ஊறுகின்ற  எறும்புகளை நினைவுபடுத்துகின்றன  சாலையில் ஊர்கின்ற  ஊர்திகள்  முதலிரவில் சரியும்  பெண்ணின் முந்தானைபோல்  மெல்லச் சரிகிறது இரவு  கருக்களை கவ்விக்கொண்டு   வலதுபக்க தூரத்தில்  அமர்ந்திருக்கும் காதலர்களும் இடதுபக்க தொலைவில் கூடிக்களிக்கும் குடும்பமும் ஒரு பக்கம்  உறங்கும் பூனையும்  மறுபக்கம்  சாரை எறும்புகளுமாக அமர்ந்திருக்கும் எனக்கு  ஏதோ சொல்வதாய்ப் படுகையில்  எதிர்கடையிலிருந்து  வெளிவருகின்ற  எஜமானி எனக்கு  பேரழகியாய்த் தெரிவது  விந்தையில்லை!- ஆனால்  உற்றுப் பார்க்கிற பூனைக்கு??!! ஒருவேளை  குடும்பம் பிரித்து  கூட்ட...

பதட்டமாயிருக்கிறது

Image
அந்த மின்சார படிக்கட்டுகளில்  இறங்கும் போதுதான்  அவளைப் பார்த்தேன்  அடிக்கடி பார்க்கிற அவள் தான்  இன்று கொஞ்சம் ஒன்றிப் பார்த்தேன்  மனது இலகுவாயிருந்த  காரணத்தால் இருக்கக் கூடும்  வருவோர் போவோருக்கெல்லாம்  வாசனை திரவியத்தைத்  தெளித்துக்கொண்டிருந்தாள்  யாராவது வாங்கிவிட  மாட்டார்களா என்கிற ஏக்கம்  அவள் விழிவிட்டு  வெளியே தெரித்துக் கொண்டிருந்தது  காற்றில் திரவிய வாசனையும்  மனதில் அவள் நினைப்பின்  வாசனையும்  பெருகியிருந்ததில்  கொஞ்சம் வந்த வேலை  மறந்து போனது  ஆளைக்கவரும்  அலங்காரம் - கொஞ்சம்  அழகுஉடை  எனக் காலையிலிருந்து  கடை சாத்தும் வரை  என்ன மாதிரி வேலை இது?  ஏன் இப்படி கூவிக் கூவி அழைக்க வேண்டும்? வேண்டுமென்றால் வந்து  வாங்குவார்கள் தானே? அவளது பிள்ளையோ பெற்றோரோ அவளை  இவ்வாறு பார்க்கையில்  என்ன நினைப்பர்? என் போல் நினைப்பரோ? அவளுக்கு இந்த வேலை ...

780 / 1200

Image
         +2 ரிசல்ட் வந்து தமிழ் நாடே அதிரி புதிரியாக இருக்கிறது இந்நேரம். என் மகன் / மகள் அவ்ளோ மார்க் எடுத்திட்டா, என்னைப்/ எங்களைப் பெருமை படுத்திட்டா. என் பையன் நல்ல மார்க் எடுக்கல. எதிர்காலம் போச்சு. என எல்லார் வீட்டிலேயும் டிரவுசரை அவுப்பார்கள்.      இளையராஜா ஒரு முறை தேசிய விருது குறித்து இவ்வாறு சொன்னார். " விருதுக்கும், இசைக்கும் என்னய்யா சம்பந்தம்" என்று. அதுமாதிரிதான் இப்போ நானும் சொல்றேன் மார்க்குக்கும் வாழ்க்கைக்கும் என்னய்யா சம்பந்தம். நான் +2 படித்த அனுபவத்தை இப்படி பட்ட நேரத்தில சொன்னதான் பயபுள்ளைக படிப்பாணுக என்பதால் சொல்லித் தொலைக்கிறேன்!!!! இது எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல். (கி.பி.1998ல்!! ) தமிழ்                          - 86 ஆங்கிலம்                - 80 கணிதம்                    - 79 அறிவியல்             ...

அவள் பற்றிய கனவு

Image
அவள் பற்றிய கனவொன்று  அடிக்கடி வருகிறது  நீண்டு உயர்ந்த மலைமுகட்டில்  உரையாடி நடக்கையில்  வீழ்வது போலவும்  அருவிக்கரையில் அமர்ந்து  விரல்கள் நீவுகையில்  ஆற்றுவெள்ளம்  அடித்துச் செல்வது போலவும் ஆளுக்கொரு பக்கமாய்  அமர்ந்து வாசிக்கையில்   அணைக்கும் விபரீதம் நிகழ்வது போலவும்     அவள் பற்றிய கனவொன்று அடிக்கடி வருகிறது உரையாடலின் மகிழ்வு முகம்  உயரத்திலிருந்து வீழ்கையில்  மாறும் நிகழ்வும்  விரல்கள் நீவுகையில்  விழிக்கும் விழிகள்  விழுந்துருளுகையில் பதைப்பதுவும் அமர்ந்து வாசிக்கையில்  அணைக்கும் விபரீதத்தில்  அடிக்கும் அவள் இருதயம் கண்டு  இரவுமட்டும் உறெங்குகையில்  இடிவிழுந்தவன் போல்  என்னைப் பயந்தெழுப்புகிற  அவள் பற்றிய கனவொன்று அடிக்கடி வருகிறது சின்னசிறு வயதில்  சிந்தை கலைத்த அவள்  பள்ளிப்பருவத்தில்  படுத்திய அவள்  கல்லூரி காலங்களின்...

கனவுமட்டும் கலைவதேயில்லை.

Image
கடந்த மௌனம் கடுகளவும் உணர்த்தவில்லை  கடக்கும் காலம்  இப்படியும் கணக்குமென்று  அதீத ஆசை அழைப்பு  அலைவரிசை மாறி  அணைக்கப்பெற்றால்  அன்பு இப்படியும்  அணையுமென அடிக்கடி எடுத்துரைக்கிறது ஆச்சர்ய வாழ்க்கை வார்த்தைகள் பொய்த்துப்போன வறண்ட மனதினில் வற்றாது நீர்ப்பாய்ச்ச வசீகர பாடல் ஓன்று பேரின்பமாய் ஒலிக்கிறது பேரூந்துப் பயணங்களில் இருகாதுகளின் வழி நுழைத்து இதயத்தை கனமாக்குமாறு என்னை மறக்கவோ, நினைக்கவோ வைக்கின்ற ஏதாவதொரு பாடலை நீயும் கேட்கக் கூடும் எப்போதாவதோ, அடிக்கடியோ? நினைவுகள்  உயிரை அறுப்பதும் நிகழ்வுகள் கணத்துக் கடப்பதும் அடிக்கடி நிகழ அறியாமையே காரணம் அவ்வகையில் காதல்..... ரணம் மகிழ்பொழுதுகளில் அதிகம் பேசா நீ மனம் வருத்தும் பொழுதுகளில் மௌனிப்பது நல்லதல்லாத நகைமுரண்! உனைப்புரியாத உனக்கு உலகம் புரிவதும் உள்ளவன் புரிவதும் உயர் கிடக்கை வாய்த்தால் வாழ்க்கை பொய்த்தால் போச்சு உனக்கும் எனக்கும் உள்ளே இருக்கின்ற ஆத்மா அசுத்தமாகாதவரை கண்தவறிப் போனாலும் கனவுமட்டும...