சுவரொட்டிகளை பிடிப்பதில்லை
எனக்கு சுவரொட்டிகளை
கண்டாலே பிடிப்பதில்லை
அறிவற்ற
அடிவருடிகளின்
அசுத்தப்படுத்தும்
அருவறுப்பான
சுவரொட்டிகளை
கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை
நேற்று அந்தச் சுவற்றில்
ஒரு மரம்
ஒரு மான்
ஒரு நிறைந்த கானகம்
ஒரு ஒழுங்கான அழகுடன்
உயிரோடிருந்தது
இன்று?
நேற்று
மேம்பாலத்தில் நின்று
கீழ் செல்லும் வாகனம் ரசிக்கலாம்
கீழே எறும்புபோல் ஊர்கின்ற
மனிதர்கள் ரசிக்கலாம்
அகண்ட வானினினை
அலையும் மேகந்தனை
அமைதியாய் ரசிக்கலாம்
இன்று?
சாலையில்
ஒருபுறமாகச் செல்கையில்
மறுபுற மனிதர்களின் செய்கைகளை
மந்திரமாய் விரையும்
கணங்களை மறைத்து
மடத்தனத்தின் சாட்சியாக நிற்கும்
இந்தச் சுவரொட்டிகளை
கண்டாலே பிடிப்பதில்லை
ஒட்டுபவனின்
உருவாக்குபவனின்
கைகளுக்கு
கவள உணவளிக்கும்
இந்த சுவரொட்டிகள் என்பது தவிர்த்து
அறிவற்ற
அடிவருடிகளின்
அசுத்தப்படுத்தும்
அருவறுப்பான
இந்தச் அபத்தச் சுவரொட்டிகளை
கண்டாலே எவர்க்கும் பிடிப்பதில்லை.
vettigal ottum suvat ottigal' ; ithu oru suyanala prathabam
ReplyDelete