அவள் பற்றிய கனவு
அவள் பற்றிய கனவொன்று
அடிக்கடி வருகிறது
நீண்டு உயர்ந்த மலைமுகட்டில்
உரையாடி நடக்கையில்
வீழ்வது போலவும்
அருவிக்கரையில் அமர்ந்து
விரல்கள் நீவுகையில்
ஆற்றுவெள்ளம்
அடித்துச் செல்வது போலவும்
ஆளுக்கொரு பக்கமாய்
அமர்ந்து வாசிக்கையில்
அணைக்கும் விபரீதம்
நிகழ்வது போலவும்
நிகழ்வது போலவும்
அவள் பற்றிய கனவொன்று
அடிக்கடி வருகிறது
உரையாடலின் மகிழ்வு முகம்
உயரத்திலிருந்து வீழ்கையில்
மாறும் நிகழ்வும்
விரல்கள் நீவுகையில்
விழிக்கும் விழிகள்
விழுந்துருளுகையில் பதைப்பதுவும்
அமர்ந்து வாசிக்கையில்
அணைக்கும் விபரீதத்தில்
அடிக்கும் அவள் இருதயம் கண்டு
இரவுமட்டும் உறெங்குகையில்
இடிவிழுந்தவன் போல்
என்னைப் பயந்தெழுப்புகிற
அவள் பற்றிய கனவொன்று
அடிக்கடி வருகிறது
சின்னசிறு வயதில்
சிந்தை கலைத்த அவள்
பள்ளிப்பருவத்தில்
படுத்திய அவள்
கல்லூரி காலங்களின்
கால்பதித்து கலைந்த அவள்
வளர்ந்ததும்
வாலிபனாய் மாறியதும்
வந்து வந்து போன
எத்தனையோ
அவள்களைப் பற்றிய கனவொன்று
அடிக்கடி வருகிறது!
Comments
Post a Comment