நண்பன்
எனக்கு ஒரு நாயினை
நண்பனாக
சில தினங்களாகத் தெரியும்
நான் வீதிவருகையில்
வாலாட்டி
வணக்கம் செய்வதுபோல்
எழுந்துநின்று
தலையசைக்கிற
அவ்வப்போது நான்
அளிக்கும் அதீத உணவுகளை
உண்டு முடித்ததும்
உணர்வாய் உரசி நிற்கிற
ஒரு நாயினை
நண்பனாக எனக்கு
சில தினங்களாகத் தெரியும்
நான் வெற்றுக்கையுடன்
திரும்பும் தினங்களில்
ஒட்டிய வயிறுடன்
காத்திருந்தாலும்
உணர்ச்சி விதும்பி
கோவம் கொள்ளாத
சமயங்களில்
சத்தமாக கத்திமுடிக்கையில்
குரைத்து எதிர்க்காத
நான் நாயென்று சொல்லக்
நா கூசுகிற
என்போல் நாய்க்குணமில்லா
ஒரு நல்ல நண்பனை
எனக்கு சில தினங்களாகத்
தெரியும்.
Comments
Post a Comment