இரண்டு வாக்கியங்கள்

இருவருடங்களுக்கு பிறகு
இசைந்த குரல் அது
இரண்டு வாக்கியங்கள்
இசைந்திருந்தாள் அவள்
மூன்றாவதாக
ஆயிர அர்த்தம் கடத்திய - ஒரு
அரைநொடி மௌனம்
முதலில் உதித்தது
"நான் நல்லா இருக்கேன்" என்பது
அதில் "என்ன பேசவேண்டுமென்பது"
இரெண்டாவது வாக்கியம்
இந்த இரெண்டு வாக்கியங்கள்
இருவருட இடைவெளியை
நிரப்பும் என நினைக்கிறேன்
நிரப்பியதுபோலவும் தெரிகிறது
நாட்களின் கோர்வையாகி
நசிந்த வருடங்களை
இந்த வாக்கிய கோர்வையால்
வளமாக்க வேண்டும்
இந்த இரு வாக்கியங்களை
திரும்பத் திரும்ப
என் மனதிற்குள்
அனுப்புகிறேன்
எதிரொலியாய்
பேசிக்களித்த
எல்லா நினைவுகளையும்
கிளர்ந்து வந்து
எனக்குள் மறுபடியும்
சேர்க்கிறது
இன்னும் இருவருடம்
காத்திருந்து
இரெண்டொரு வாக்கியங்கள்
நான் கேட்க
அவள் உதிர்க்கவேண்டும்
ஒவ்வொரு சொல்லாக
சில மாதங்களும்
ஒவ்வொரு எழுத்தாக
பல மாதங்களும்
அவள் குரலின் ஒலியோடு
நினைவுகூர்ந்தால்
இரெண்டொரு வருடம்
இப்படியென்பதற்குள் கழியலாம்
ஏனிந்த ஆயுளேகூட.
Comments
Post a Comment