07/05/2015 ன் மாலை
மூக்கின் அருகே வீசுகிறது
புல்லிலிருந்து பிரிந்து
காற்றில் கரைகின்ற வாசம்
சற்று தள்ளியிருக்கும்
காதின் அருகே
ரீங்காரமாய் இசைக்கிறது
கூட்டிலிருந்து கிளம்பிவந்து
கூதுகலமாய் பறக்கின்ற
குட்டி ஈயின் இறக்கைகள்
சாரையாய் ஊறுகின்ற
எறும்புகளை நினைவுபடுத்துகின்றன
சாலையில் ஊர்கின்ற
ஊர்திகள்
முதலிரவில் சரியும்
பெண்ணின் முந்தானைபோல்
மெல்லச் சரிகிறது இரவு
கருக்களை கவ்விக்கொண்டு
வலதுபக்க தூரத்தில்
அமர்ந்திருக்கும் காதலர்களும்
இடதுபக்க தொலைவில்
கூடிக்களிக்கும் குடும்பமும்
கூடிக்களிக்கும் குடும்பமும்
ஒரு பக்கம்
உறங்கும் பூனையும்
மறுபக்கம்
சாரை எறும்புகளுமாக
அமர்ந்திருக்கும் எனக்கு
ஏதோ சொல்வதாய்ப் படுகையில்
எதிர்கடையிலிருந்து
வெளிவருகின்ற
எஜமானி எனக்கு
பேரழகியாய்த் தெரிவது
விந்தையில்லை!- ஆனால்
உற்றுப் பார்க்கிற பூனைக்கு??!!
ஒருவேளை
குடும்பம் பிரித்து
கூட்டிவரப்பட்டதாய் இருக்குமோ??
யார்கண்டார்?!
பூனையின் தோள்கள் பற்றி
புரிந்துகொள்ள ஆசைதான்!
எங்கே நடக்கும்?
அருகிலிருந்த எறும்பிடம்
அங்கலாய்த்துப்
புலம்புகையில்
அரபுமொழி பேசுபவனை
நான் பார்த்தது போல்
எனைப்பார்க்கிறது
பார்க்கிறது எறும்பு!!.
Comments
Post a Comment