கண்களின் உடல்கள்

ஊரில் திருவிழா
நடந்து கொண்டிருந்தது
அங்கே படையலும் நிரம்ப
இருந்தது
கலயங்களும் நிரம்ப
குழுமியிருந்தன
கஞ்சி பருக
காத்திருந்த கண்களும்
நிரம்ப குழுமியிருந்தன
பூசை முடிந்ததும்
பூசாரி மணியடிக்க
கலயங்களை கைப்பற்ற
கண்களின் உடல்கள்
முண்டியடித்து முயன்று கொண்டிருந்தபோது
உடலின்
கண்கள் மட்டும்
காலிபண்ணி கொண்டிருந்தன
கலயங்களை
எட்ட நின்றவாரே!!!
Comments
Post a Comment