ஒற்றை வியர்வைத் துளி
அறைக்குளிர்விப்பான்
அணைந்ததும்
அதிரடியாய் எட்டிப்பார்த்தது
அந்த ஒற்றை வியர்வைத் துளி
ஓராயிரம் துளிகளாய்
ஒன்றுகூடி வழிகையில்
எங்கிருந்து தோன்றியிருக்கும்
அந்த முதல் ஒற்றைத்துளி
எனக் கேள்வியாய்
வழிகிறது சிந்தனை
"நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்த"
எனுமொரு உழைப்பு குறித்த
முதுமொழி
மூளை நிரப்ப
கேள்விகள் வரிகளாக
கொழுப்பு கரைய
பெருகும் வியர்வை போல்
சிந்தனை கரைய
நிரம்புகிறது கவிதை
அணைந்த
அறைக் குளிர்விப்பானுக்கு
அத்துணை நன்றிகள்
கொஞ்சம்
கொழுப்பைக் கரைத்து
எழுத்தை குவித்தமைக்கு!!!
Comments
Post a Comment