கனவுமட்டும் கலைவதேயில்லை.
கடந்த மௌனம்
கடுகளவும் உணர்த்தவில்லை
கடக்கும் காலம்
இப்படியும் கணக்குமென்று
அதீத ஆசை அழைப்பு
அலைவரிசை மாறி
அணைக்கப்பெற்றால்
அன்பு இப்படியும்
அணையுமென
அடிக்கடி எடுத்துரைக்கிறது
ஆச்சர்ய வாழ்க்கை
வார்த்தைகள் பொய்த்துப்போன
வறண்ட மனதினில்
வற்றாது நீர்ப்பாய்ச்ச
வசீகர பாடல் ஓன்று
பேரின்பமாய் ஒலிக்கிறது
பேரூந்துப் பயணங்களில்
இருகாதுகளின் வழி நுழைத்து
இதயத்தை கனமாக்குமாறு
என்னை மறக்கவோ,
நினைக்கவோ
வைக்கின்ற
ஏதாவதொரு பாடலை
நீயும் கேட்கக் கூடும்
எப்போதாவதோ, அடிக்கடியோ?
நினைவுகள் உயிரை அறுப்பதும்
நிகழ்வுகள் கணத்துக் கடப்பதும்
அடிக்கடி நிகழ
அறியாமையே காரணம்
அவ்வகையில்
காதல்..... ரணம்
மகிழ்பொழுதுகளில்
அதிகம் பேசா நீ
மனம் வருத்தும் பொழுதுகளில்
மௌனிப்பது
நல்லதல்லாத
நகைமுரண்!
உனைப்புரியாத உனக்கு
உலகம் புரிவதும்
உள்ளவன் புரிவதும்
உயர் கிடக்கை
வாய்த்தால் வாழ்க்கை
பொய்த்தால் போச்சு
உனக்கும் எனக்கும்
உள்ளே இருக்கின்ற
ஆத்மா அசுத்தமாகாதவரை
கண்தவறிப் போனாலும்
கனவுமட்டும் கலைவதேயில்லை.
அடிக்கடி எடுத்துரைக்கிறது
ஆச்சர்ய வாழ்க்கை
வார்த்தைகள் பொய்த்துப்போன
வறண்ட மனதினில்
வற்றாது நீர்ப்பாய்ச்ச
வசீகர பாடல் ஓன்று
பேரின்பமாய் ஒலிக்கிறது
பேரூந்துப் பயணங்களில்
இருகாதுகளின் வழி நுழைத்து
இதயத்தை கனமாக்குமாறு
என்னை மறக்கவோ,
நினைக்கவோ
வைக்கின்ற
ஏதாவதொரு பாடலை
நீயும் கேட்கக் கூடும்
எப்போதாவதோ, அடிக்கடியோ?
நினைவுகள் உயிரை அறுப்பதும்
நிகழ்வுகள் கணத்துக் கடப்பதும்
அடிக்கடி நிகழ
அறியாமையே காரணம்
அவ்வகையில்
காதல்..... ரணம்
மகிழ்பொழுதுகளில்
அதிகம் பேசா நீ
மனம் வருத்தும் பொழுதுகளில்
மௌனிப்பது
நல்லதல்லாத
நகைமுரண்!
உனைப்புரியாத உனக்கு
உலகம் புரிவதும்
உள்ளவன் புரிவதும்
உயர் கிடக்கை
வாய்த்தால் வாழ்க்கை
பொய்த்தால் போச்சு
உனக்கும் எனக்கும்
உள்ளே இருக்கின்ற
ஆத்மா அசுத்தமாகாதவரை
கண்தவறிப் போனாலும்
கனவுமட்டும் கலைவதேயில்லை.
Comments
Post a Comment