Posts

Showing posts from 2023

My Love Light!

Image
You are painting love All inside of my heart All inside of my soul All inside me Blended with all emotions a s colors  And continue painting over the years You have been bringing all the colors to my life  All the time! Today you painted outside too That too at home With tons of love   With tons of happiness With tons of empathy ! This time You brought for everyone  To the kids  To the elders To the grown-ups That too not just with colors! You brought the sky,  You brought the stars You brought the nebula You brought the abundant of the universe  And the galaxy itself As a love pampered package! I have never seen the kid inside me You brought him out today You made him excited You made him cry with joy You made him walk through his childhood You made him realize how real joy feels You have given him the greater old time of his! You break boundaries with love You make the fan following more with love You make your opponents love you even Who you are? wh...

உள்ளேயும் வெளியேயும்!

Image
நீதான்  இன்று, இங்கு  மழையாய்ப் பொழிகிறாய்  நேற்று  கொஞ்சம் மஞ்சள் பூசிய  வெயிலாக  பிறிதொரு பின்னாளில்  கதகதப்புத் தேடும்  குளிராக  கார்கால  இலையுதிர்க்கும்  தென்றலாக  சில நாட்களில்  கொஞ்சம் அரிதாக குழந்தை பயமளிக்கும்  புயலாகவும் நீ! அதே நீதான்  நீதான்  இன்று, இங்கு எப்பொழுதும்  மழையாய்ப் பொழிகிறாய் உள்ளேயும் வெளியேயும்!.

மாயக்காரி! (Magician)

Image
எப்பொழுது விடியுமங்கு  என்றுதான்  இங்கு எனக்கு  தினம் விடிகிறது  காத்திருப்பில்  காலம் கரைகையில்  இதயம் என்னவெல்லாமோ  செய்கிறது  காற்றில் குளிர் வீசும்  இப்பொழுதில்  பறக்கும் ஒற்றைப் பட்டாம்பூச்சியை  உன்னித்துப் பார்த்தவாறே  சிரித்துக் கொண்டிருக்கிறேன்  நேற்று  அவ்வளவு கணமாக ,  காலநிலை போல  இருண்டே இருந்தது  மனமும்  உன்னிடம் பகிர்ந்தும்  அவ்வளவாக குறையவில்லை  இடியாய், மின்னலாய்  அழுத்திய பாரம்  நீ  குரல் வழி அனுப்பிய  இரவு, இறுதிக்  குறுஞ்செய்தியில்  மலையளவு பாரம்  இறகாய் பறந்து போனது  நீ  எனக்காக  எப்பொழுதும்  சொற்களின் வழி  புன்னகையின் வழி  தரிசனங்களின் வழி  மாயங்கள் நிகழ்த்துகிறாய்  மந்திரங்கள் செய்கிறாய்  மகுடிப் பாம்பாய்  என்னை வியாபித்துக் கொல்கிறாய்! ஆயிரம் வண்ணத்து பூச்சிகளையும்  ஒரு  கோடி நட்சத்திரங்களையும்  சில நூறு நாய்குட்டிகளையும்  கொஞ்சம் வண்ண பூக்களையும்  மானசீகமாய்...

வேண்டுதல்!

Image
     இதயம்  நெகிழ்ந்திருக்கும் இப்பொழுதில் மழைக்கு முந்தைய இருள் சூழ்ந்திருக்கும், உனை மறக்கவிடாது   செய்கின்ற  மழை  பொழியக் காத்திருக்கும்  அதிசய இத்தருணம்  முடிவதற்குள் வார்த்தைகள்  முண்டியடித்து  என் மூளைதனை குழப்புகின்ற   நெருக்கடியில் செல்களெல்லாம் நீ தீவிரமாய் வியாபித்து  சிந்தனையை நெருக்கும்  இந்நொடியில் ஒரு நல்லிசை உன்னை விட்டுத் தள்ளியிருக்கும் துயரத்திற்க்கு சிசுவாய் கண்ணீர்  உகுக்கச் செய்க்குகையில்  இம்மையும் மறுமையும் ஏழு பிறப்பும் பிரியத்தால் பேரன்பால் காதலால் காமத்தால் நீயே எனை ஆட்கொள்வாயாக தேவி என எண்ணும்  இம்மணிப் பொழுதில் உயிரின் நுனியில், ஆத்மாவின் அடியாழத்தில் வந்தமர்ந்து கொண்டு உயிரை உருக்கி உளறச் செய்து புன்னகையும் போரட்டமுமாய் பசலையும்  பரிதவிப்புமாய்  மனதை எப்பொழுதும் கொந்தளிக்க செய்வதுமாய் எனைப்படுத்தியெடுக்கிற உன்னிடம்... இனியும் முடியாதென்பதால் மன்றாடி இப்பொழுது கேட்கிறேன் என்னோடு வந்துவிடு என் உயிரைக் கொடுத்தாயினும் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.

மழை!

Image
இப்பொழுதான்  மழைப் பெய்ந்து ஓய்ந்திருக்கிறது  உன் கண்ணின்  கருவிழிகளாய்  இருட்டிக்கிடக்கிறது வானம்  ஈரத்தரையில்  சிறகு சிலிர்ப்பி  உலர்த்திக்கொள்ளும் குருவிகள்  காண்கின்ற வாழ்வு  எப்பொழுதும் சலிக்காத வரம்  துணிகள் உலர்த்தும்  கொடி கம்பிகளில்  மழைத்துளிகள் நடத்தும்  மாரத்தான் ஓட்டங்களை   கூர்ந்து கவனிப்பின்  ஞானம் நிச்சயம் மின்னலும் ,இடியும்  ஒன்றிணைந்து வருகையில்  கண்களை மூடி  காதுகளைப் பொத்திக்கொண்டு  "அர்ச்சுனா, அர்ச்சுனா" என சிறுவனாகையில்..  யார் அந்த அர்ச்சுனா  என இளைய மகள்  கேட்டக்கூடும் சுவாரஷ்யம்  இன்று உண்டு  நேற்று வாங்கி வந்து  இன்று துளிர் விட்டிருக்கும்  செம்பருத்திச் செடியின் இலையில்  சிரிக்கின்ற மழைத்துளியினை  பார்த்தேன்  பள்ளிவிட்டு வீடு திரும்பும்  மகளிடம் அதைச் சொல்லி  அவள் விழிகள் விரியும்  இரெண்டாம் அதிசயம்  காண வேண்டும்  வாடகை வீட்டின்  முதல்மாடி  சன்னல்களிலிருந்து  மழையை ரசிக்கவு...

"Don't get obsessed by me"

Image
You have been saying  "Don't get obsessed by me" You forget one thing this happened 20 years back. Way old, way deep now.  The Micro love becomes macro and magnanimous! You can't uproot a tree You can't erase the soul's memory You can't change the past You can't change the sun, moon, and the Universe Change is sometimes beyond us You can't change me..Even I can't in this regard You can't change the "you" in me. You have been saying  "Don't get obsessed by me" You are imbibed deep inside me at the DNA level! Which shadows me during my tough times,  Which makes me sleep on sweaty nights blowing a breezy wind,  Which is the most I treasure in my life so far,  Which guards me from my dreamy uncertainty,  Which often the meaning of the life I am living in this crazy world,  Which still keeps me in faith in humanity in a world of selfishness,  Which is one of the ultimate feelings that drove me to be happily alive which of...

நீயே ஒரு திருவிழா!

Image
நீண்ட  வட்டவடிவ அழகு முகம் அடிக்கடி ஆச்சர்யம்  வரையறுக்கும் அலைகள் போல்  இரு புருவங்கள் குழந்தையின்  குதூகலத்தில்  அப்படிப் பேசும்  ஆச்சர்யக் கண்கள்  மெத்தென உப்பிய  அப்பொழுதுதான் வெந்த  வெதுப்பக  ரொட்டிக் கன்னங்கள்  படைப்பின்  பெரும் மெனக்கடல் தெரியும்  சிறு உதடுகள் நாடிப்  பகுதி,  கவனித்தால்  கவனம் சிதறும்  ஆபத்தான  அழகிய பள்ளத்தாக்கு  நீயே  ஒரு திருவிழா  உன் முக தரிசனமே  எனக்கு  அடிக்கடி நிகழும்  அலுக்காத  திருவிழாக் கொண்டாட்டம்!

இம்சை அரசி!

Image
நீ  இரவுகளில் இம்சிக்க தவறுவதேயில்லை பெரும்பாலும்  பகல்களிலும் கூட! நேற்று  முணுமுணுத்துக் கொண்டிருந்த  ஒரு பாடல் வழி  உள்நுழைந்து  என் இதயத்தை  என் இரவை  என் உறக்கத்தை  சிறு சிறு துண்டுகளாய்  பிரித்து பிரித்து  சேர்த்து சேர்த்து  விளையாடிக் கொண்டிருந்தாய்! ஒரு காதல் சினிமாவில்  கதையின் நாயகியாய்  நீதான் தெரிந்தாய்  ஏதோ ஒரு முகத்துடன்  உன் முகத்தை  மூன்று மணிநேரம்  பொருத்தும்  அறிவியல் விந்தையை  இந்தக் காதல்  இந்த பிரியம்  எப்படி நிகழ்த்துகிறதென  குளிரும் இரவில்  ஆச்சர்யத்தில்  உறைந்திருந்தேன்!  ஒரு ரம்மியமான மாலை  மழை தூறும் வானம்  பின்னிருந்து நான் பார்க்கும் யாரோ ஒருத்தி  நெட்டி முறிக்கும் குட்டிப் பூனை  புன்னைகைக்கும் சிறுமி  மேனி தழுவும் சிறு காற்று  எங்கோ கேட்கும் ரம்மிய இசை  தலை சிலிர்ப்பும் நாய் குட்டி  காற்றில் உதிரும் பெரு இலை கால்கள் தழுவும் சிறு அலையென  இப்படி  எல்லா ரூபத்திலேயும் வந்து  இம்சி...

Raining In and Out!

Image
The rain at night is special Very special As Like you with me  At night! When the dark engulfs  The dancing starts! The rain is pouring  With heavy lightening  With heavy thunderstorm  Like a nightclub Rain dancing while lightening blinks on and off Thunderstorm took the drummers' part Where the whole sound of pouring drops  In the different places  Felt like a night party! My body telling me to sleep out Where mind asks me to enjoy  The fun happening out On one thunderstorm  Your thought sparked as a lightning strike Now raining inside too! Though it's usual  This time it felt different As in and out is raining The party is on! You and Rain have similarities!  Or feel the same to me often As it pours unexpectedly by breaking the forecast And often drenched me!  You and Rain have similarities! As you are the beauty of a minority You speak rarely as rain pours You have been shy often as rain too You too have cute many expression...

எப்போதும் அது போதுமெனக்கு

Image
இந்த இரவு  இப்படியே  விடியாது  நீண்டாலென்ன  எனத் தோன்றுகிறது! காதுகளில்  இசையாயும்  மனதில் காட்சிகளாகவும்  நீ முடிவில்லாது  விரிந்து கொண்டே சென்றால்  நான் எவ்வாறு  தூங்குவது?  எங்கனம் தாங்குவது?  இவ்வளவு  அன்பின் பாரம்!  பிடித்த மிட்டாயை  நினைத்துக் கொண்டே அழுந்தும்  குழந்தைபோல நான்  இந்நாட்களில்  உனக்காக!  என் இதயம்  கணத்தும்,  இலகுவாயும்  இந்நாட்களில்  கண்களில்  கண்ணீர் பூக்க  காரணம் நீ! நீ என்னை  சந்திக்க மறுப்பினும்,  இதயத்தினை தராது போயினும்,  திட்டிக்கொண்டே இருப்பினும்,  ஒரேயொரு வரம்  மட்டும் தந்தால்  பிறவிப் பேறடைவேன்  நீ பேணும்,  பேரன்பினைப் பொழியும்  நாய்க்குட்டிகளாய்  எண்ணித் தந்தாலும்  போதும்! உன்னை ஒருதலையாகவாவது காதலிக்க  அனுமதிதான்  அது!  தினமும்  கனவில் வரும்  அந்த ஆதிசிவன்  நீதான் எனக்கு! நீ  உள்ளிருக்கையில்  உனது  வீட்டினைச் சுற்றுதலே  கிரிவலம...

எல்லாம் உதிர்ந்ததும்

Image
நாம் பரஸ்பரம்  அறிவோம்  பன்னிரு ஆண்டுகளாக  உன் பால்யம் பகிர்ந்திருக்கிறாய்  கல்லூரி நாட்கள் கொஞ்சம்  கடந்த துயர்கள் கொஞ்சம்  கனவுகள் கொஞ்சம்  கோபம் கொஞ்சம்  ஆசைகள் கொஞ்சம்  ஆற்றாமைகள் கொஞ்சம்  தவிப்புகள் கொஞ்சம்  சந்தோசம், குதூகலம்  பயணங்கள்  பயணங்களின்  பலன்கள்  என எத்தனையோ  பகிர்ந்திருக்கிறாய்  முடிவில்  நீயும் நானும்  ஒரே ஆத்மாவின்  வேறு உடல்கள்  என் கையில்  சிரிப்பாய்! நீயும் நானும்  ஒரே ஆத்மாவின்  ஓரே மனங்கள்  என்ற பொழுதும்  சிரிப்பாய்! இப்பொழுது  இறகுகளை  உதிர்க்கத் தொடங்கியிருக்கிறாய். எல்லாம் உதிர்ந்ததும்  பறவையாவாய்!

நனைதல்

Image
சூடான தேநீரின் ஆவி ஆடிகளில் படிய  ஜன்னல் வழி  மழையில் நனைந்த  சிறகினை உதறும்  சிறுகுருவி குறித்த  கவலையில் ஆழ்கையில்  மரத்தின் கிளையில்  மழையில் குளித்து  மகிழும் காகம்  மனம் மாற்றுகிறது  வீதியை ஈரமாக்கி  தெப்பமாக்கும்  மழையின் நீரில்  பிம்பம் பார்க்க  குடையின்றி நனைகையில்  மூப்பு கரைகிறது  மழையென்ன  நிலத்தை மட்டுமா  நனைக்கிறது, குளிர்விக்கிறது  நினைவுகளையும் தான்!

விரல்கள்

Image
  உன் விரல்கள்  எனக்கு  தாய்மையின் அருகாமை  என்னுள்  ஆழ்ந்து கிடக்கும்  பால்யத்தின் நீட்சி  உன் விரல்களைப் பற்றிக் கொள்ள நினைப்பது நகங்களில் வண்ணங்குழைத்து வானம் தீட்டும் நீ எனது நட்சத்திர தேவதை உனது  ஓவ்வொரு விரல்களும் எனக்கு இரவுக்கனவுகளில் பல கதை சொல்கின்ற  விண்மீன்கள் மல்லாக்க படுத்து வான் நட்சத்திரங்களை எண்ணும் வயதிற்கு  என்னை அழைத்துப் போகும் வானூர்தி  அவ்விரல்கள் நமக்கிடையேயான பெருந்தொலைவை மங்கச்செய்து ஆத்மாவை இறுகப் பிணைக்கும் திறவுகோல்கள் இவ் விரல்கள் உன் விரல்களைப் பற்றும் தருணங்களில் நான் உன்னுடன் நீக்கமற  கலக்கின்ற மாயம்  நிகழ்வதால் அவை எனக்கு உன் ஆத்மாவை  அடைய எழுப்பப்பட்ட நுழைவுவாயில்கள்.

I LOVE YOU!

Image
நீ சொல்லிய  அரிதினும் அரிதான  "I  love  you" க்களை  ஒரு பொக்கிஷம் போல  வைத்திருக்கிறேன்  நான் பால்யம்  கடத்திய  கிராமத்தின் வீதிகளிலும்  என்  நியாபகத்தில்  புதைந்து கிடைக்கும்  ஆரம்ப பள்ளியின்  வாசலிலும்  எனது  அம்மா வீட்டில்  இன்றும் நிற்கும்  பனைமரத்தின்  அடியிலும்  சாந்தா  அக்காவை  நினைத்துக் கொண்டு  அவர்கள்  வீட்டு கல்திண்ணையிலும்  நான் உன்னோடு  தீபாவளி வாழ்த்துக்களை  பரிமாறிய  வெயிலடிக்கும்  மொட்டைமாடியிலும்  எனது கல்லூரி  அரசமர சைக்கிள்  கொட்டகையிலும்  போய் நின்று  உனது "I Love you" வை  நீ என்னிடத்தில் சொல்வதாக  மனதிற்குள் சொல்லி  மகிழ்ந்து கொள்வேன்  உன்னை என்னவளாக  கூட்டிப் போய்  காண்பிக்க நினைத்த  என் உயிர் உலாவும்  இடங்கள் இவை.

உன்னிடத்தில் கேட்க ஒன்று இருக்கிறது..

Image
எனக்கு  உன்னிடத்தில் கேட்க  ஒன்று இருக்கிறது எனக்கு அவளை பிடிக்கிறது ரெம்பவும்..  அவள்  ஆழ் மனஅழகி மட்டுமல்ல உள்ளும், புறமும் அத்தனை அறிவவள் அத்தனை அழகவள் ஜீவகாருண்ய பேரழகி! அவள் பேசுவதைக்  நீ கேட்க வேண்டும் நீயும் காதல் கொள்வாய்!  மழலை, மங்கை முதல் பேரிளம் பெண்ணென அத்தனையும் உள்ளடக்கிய அணங்கவள்!  இன்னொரு  பிறவியெல்லாம்  காத்திருக்கும் பொறுமையில்லையெனக்கு மறுபிறப்பில் நம்பிக்கையுமில்லை அவளை கைவிடுமெண்ணம் அறவேயில்லை!  என் கடந்தகாலம் காட்டி  அவள் நேசம் மறுப்பின் ஒரு தலையாக  அவள் காதலை நெஞ்சில் சுமந்தே இப்பிறவிக் கடப்பேன்!  நேசம் உரைத்தபின் அவள் பேச மறுத்தால் முழுதும் தவிர்த்தால் என் செய்வது?!  நீதான் கொஞ்சம்  வழி காட்டேன்.

She was on a swing!

Image
A tune of the violin  Brought her to me today Yes, she plays the violin! Everyday, Everywhere, Everything Has a small element of her As she is omnipresent inside me!  A breeze, a lullaby  The song I hum often  The tune of nature And a stanza of a poem Everything reminds her Like a flip of the coin  She comes and goes in my mind I often strangely land up in a smile And writing a poem afterward As she is winding like a wing in a swing In my thoughts!  Nowadays she becomes  An Addiction An Obsession  A Creation too! A trigger from her smile  A trigger from her images Make me exhibit an art  Where she becomes  An arbitrary center of my thoughts  As I am merely an executor.  Hey poem,  Tell her that  I love her the way  She ever loved by any sapiens Any invertebrates or vertebrates even! I love her the way  Like the abundance of the distance between  The Earth and the sky Which can't be measured! I love...

ஓவிய நினைவு!

Image
ஒரு புள்ளியில் ஒரு கோட்டில்  தொடங்கும் ஓவியம் போல் விழிக்கிறது  உன் நினைவு! எழுச்சிப்பெற்று வண்ணங்கள் நிரம்ப விரிகிறது  நனவாகும்  பெருங்கனவாக! தூரிகைகள்  தொடுதல்போல் கடந்து போகும் தின நிகழ்வுகள் உன்னை வண்ணங் குழைக்கின்றன! நீ சிரித்தலும் நகைத்தலுமாக கடந்த தருணங்கள் அடர் நிறங்களாகவும் மெளனித்த கணத்த நிமிடங்கள் வெளிர் நிறமாகவும் உருப்பெருகையில் நிஜத்தில் நீ வருவதாய் உச்சம் பெற்று  நிறைவடைகிறது உன்  ஓவியநினைவு! நட்சத்திரங்கள் பேசிக் கொண்டிருக்கிற இந்த நடுநிசியில்.

நீயென்பது

Image
நீயென்பது  எனக்கு  உனது குரல்தான்!  வள்ளுவ குறள் போல உனது.. வரலாற்றுக் குரல் குரல் வழி  வளர்ந்த பிரியம் நமது உன் குரலின்  வெவ்வேறு அதிர்வுகளை   அது கடத்தும் உணர்வுகளையும் உன்னைவிடவும் ஆழமாய் அறிவேன்!  உன் உடல்போலன்றி குரல்  அவ்வளவு பரிட்சயமெனக்கு! உன் முகம் குறித்த  உருவம் குறித்த  கற்பனைகள்  இன்றும் உண்டு  அது அறியாமையின் வெளிப்பாடு! என் பிரியம்  உன் மீதா  உன் குரல் மீதா  என்ற தவிப்பும் இன்றும் உண்டு உன்  சுகம்  சுகவீனம்  அழுகை  கோபம்  காதல்  அமைதி  என எல்லா உணர்வுகளையும்  கடத்தும் கடத்தி  உனது குரல்  உனக்கும் அவ்வாறே! நமக்கிடையே  தொலைவு அதிகரித்ததில்  குரல் வசப்பட்டது.  நன்மையே! மொழியும், குரலும்  இல்லையெனில்  எங்கனம் சாத்தியம்  இப்பிரியப்  பேருணர்வு! எழுத்து கடந்து  குரல் வழி  அன்பு பரிமாறும் - நாம்  கடிதத்திற்க்கு முந்தைய காலம் பின்னோக்கி சென்று  முன் சேர்பவர்கள்! நீயென்பது  எனக்கு எப்பொழுதும்...

ஒருத்திகள்

Image
தினம் கனவில் வந்து   பிரியத்தின்  யாழிசைக்கிறாள் ஒருத்தி! அதிகாலை காற்றினை அவசரத்தில் கிழித்துக்கொண்டு   பயணிக்கையில்  சட்டென   கடந்து போகிறாள்  பொறுப்பான ஒருத்தி!  ஆற்றாமை  பொங்க  அழுகை முட்டுகையில்  ஆறுதல்  தலை கோதுகிறாள்  ஒருத்தி!  எத்துணை முறை  உடல் நலிகையிலும்  அத்துணை வாஞ்சையோடு  நலம் பேணுகிறாள்  ஒருத்தி! உன்னை  மிகப்பிடிப்பதாலேயே  உனதருகில்  வருவதைத் தவிர்க்கிறேன் என பேரின்பம் விதைக்கின்ற  ஒருத்தி! மழலை  மங்கை  மாதரென  எத்தனை ஒருத்திகள்  எத்தனை உணர்வுகள்  அவள்களின்றி  ஒரு அணுவும்  அவையத்தில் அசையாது!. மகளிர் தின வாழ்த்துக்கள்!

நீ வாழி!

Image
இப்பொழுதெல்லாம் நான் நினைக்கும்  பொழுதுகளில்  என்னை அழைத்து விடுகிறாய் நிச்சயமாய்  இது அனிச்சையல்ல! காலமும், தூரமும்  கடந்ததாகத் தெரிகிறது   இந்நாட்களில் நமக்குள்! செடி, கொடி  மரம் போல  அன்பினை அதிகம் ஊட்டி  பொத்தி, போற்றி  வளர்கிறது இதுவும்! நீ ஒரு போதும்  வாய் திறந்து  சொல்லவே போவதில்லை  உன் குரல் குழைகையில்  சப்தம் சன்னமாக  என் இருதயத்துக்கு  அருகில் ஒலிக்கையில்  உன்னை சிறிது  புரிந்து கொள்வதாய்  நினைத்து  மயக்கம் கொள்கிறேன்!  மலைபோல் கிடந்து, கடந்த  காலமெல்லாம்  நின் நினைவைச் சுமந்து  திரிகையில்  ஒளியின் வேகத்தில்  ஓடிப்போவதாய்  தோணுகிறது! நீ இப்போது  என்னைவிட்டு  தொலைவில் செல்வதேயில்லை  தவிர்க்க முடியாத  எனது பேசு பொருளாக  மாறியிருக்கிறாய்  பரிணாமத்தில்! நீ அருகிலில்லாது போயினும்  சந்திக்க சொற்ப தருணங்களாய்  ஆனபோதும்  நான் அதனை  உணர்வதேயில்லை! ஆண்டாளும், மீராவும்  கண்ணனுக்கு தொலைவு  புறத்தி...

I know someone

Image
  I know someone Where I am addicted to conversing   I know someone Who is so eternally beautiful   I know someone Whose aura is so magnetic   I know someone Whom I feel a little scared too!   I know someone Who loves animals unconditionally except the sixth sensed!   I know someone Who is honest to the bad even   I know someone Who is just un resistible to avoid   I know someone With whom time implies as Archimedes' principle   I know someone Whom I already fell in love   Though, I know many they are merely words but She is poetry.

My Comet!

Image
On this cold early morning   Where few good men still working on the roads In the blend of the sun which is yet to show its face I am alone traveling to a destination I packed everything required where my heart packed a bunch of your thoughts To make the travel pleasant!   I am sitting in this Non stopping train Where it is full of strangers Few reminds you With their facial features With their walk With their talk But no one there to Remind the full of you!   The seat next to me is empty As my heart, which has been without you for a span of 18 years You never knew How deep you are in me How strong you have grown inside me How powerful you are in my thoughts Even I wonder sometimes that I know a little that how much you are into me Like known is a drop and unknown is an ocean! This train moves This train travels As I move, travel But as the earth moves around the sun Moon moves around the earth The center...

இப்படியென்னில் திகழ்ந்திரு

மறுபடி நிகழ்ந்தாய் மழையென பொழிந்தாய் இருவிழி சுடர்ந்தாய் இன்றென் கண்திரள்ந்தாய் அடிவான் மின்னல் நெடுங்கோடாய் நீண்டு நெளிகிறது நடுவான் மட்டும் ஆழ்மன நினைவுகள் அப்படி ஏறி திளைக்கிறது இன்றும் இப்படியென்னில் திகழ்ந்திரு என்றும்!

சாதாரணமல்லவே!

Image
எப்போதும் வருகிற  உன் நினைப்பில் எப்போதாவது பேசிக்கொள்கிற உரையாடலின் பெரும் மெளன இடைவெளியில் இடையிடையே நிகழ்கிற சொற்கள்தான்  நம் பிரியம் சொல்லும் காலப்பலகை நீ உடல்நலிவுற்றிருக்கையில் நானறியாது உன் மீது பிரியம் பெருகுதல் சாதாரணமல்லவே!

ஏன் இவ்வளவு தாமதமானாய்?

Image
  சின்னவயதில்  பக்கத்துவீட்டு சத்யாமேல  ஒரு இது என்றேன்   பள்ளிப்பருவத்தில்  அந்த பெரியகண் பாலாவுக்கு நான் பரம ரசிகனென்றேன்  கருப்பாய் நிமிர்ந்து வளர்ந்த தாயம்மாள்  கல்லூரிக்காலத்தில் என்றேன்  அப்போதைய சினிமா  அறிமுகமான மீனாவும், சிம்ரனும்  இப்பவுந்தான் என்றேன்  பின்பு இரு சத்யாவும் ஒரு சுஜாவும்  ஒரு சரோவும்  பின்புதான் நீயென உளறி முழிக்கையில்   இதெல்லாம் சகஜந்தானே  எனச் சிரிக்கிற  நீ மட்டும்   ஏன் இவ்வளவு தாமதமானாய்?

You are here!

Image
  You are here You are here when I wish You are here when I need You are here always, forever  The beauty is  you also knew that  you are here  You are here to  Replace cold with your warmth  You are here  To replace the void with love You are here  To make me laugh in the dreams You are here  Forever with me As a soulmate  As an eternal being You are always here  inside my heart!

இரவு இன்னும் விடியவேயில்லை

Image
  நீ பேசி நீண்ட நேற்றைய இரவு இன்னும் விடியவேயில்லை.. இந்த பகலிரவில் எனக்கு மட்டும் தெரிகின்ற நட்சத்திரங்களுடே உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. காய்ந்த நிலத்தில் பொழிந்த மழைபோல் நேற்றைய இரவில் நீ! ஈரம் என்றும் மிஞ்சும்.. தூரிகை கொண்டு வரையும் ஓவியன் போல் இரவில் நீ சிரிக்கும் போதெல்லாம் கந்தர்வமாக உன்னை வரைந்து கொண்டேன் நீ வராதே போயின் வாழ்ந்து கொள்ள.. நேற்று நீ பேசி முடிக்கும் வரை நிலவும் நின்றிருந்தது வானில் அதற்கும் காத்திருப்பு அவசியப் படுகிறது என்போல்.. இலேசாகி கனக்கும் இதயமும் பயந்து தெளியும் மனமும் நீ அருளிய வரங்கள் இந்நாட்களில் எனக்கு.. நின் எல்லா காரணங்களையும் புரிந்து கொண்டு ஏற்காத மனம் எனக்கு வரமும் சாபமும்.. நான் இறக்கும் போதாவது உன் எல்லைகளை தகர்த்துவிட்டு இதழில் முத்தமிட வேண்டும் நீ என்னை.. நீ பேசி நீண்ட நேற்றைய இரவு என்றும் விடியப்போவதேயில்லை

வசவுக் கவிதை

Image
இன்றைக்கு இந்த மாலை இன்பம் அளிப்பதாக இருக்கிறது இருக்கட்டும் காரணம் நீ! அறிவாய்.  திட்டுவதன் மூலமும் மகிழ்விக்க முடியுமென உலக பிரியங்களின் வரலாற்றில்,  நமது பிரியங்களின் வரலாற்றில் ஓரு புதிய கண்டுபிடிப்பினை முழு முதலாக நீ அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாய்.  பிரியந்தோய்ந்த சிறு பிள்ளையின்  இதழ் கணத்தில்  விழுந்த வசவுகளில் பெருமழை பொழிந்த சுடு நிலமாய் மகிழ்ந்தேன்.  அன்பின் எல்லா இலக்கணங்களையும் நம் பிரியங்கொண்டு நாமே உடைப்போமே வரலாறு வணங்க!  இப்போது  உணர்கிறேன் உனது புகைப்படத்தை கட்டமாக  சட்டம் செய்து விட்டம் உயர்ந்த வீட்டில் ஏன் மாற்றினேனென!  ஆத்மாவிற்க்கு அன்றே புரிந்தது அறிவிற்கு புரிய இத்தனை காலம் எத்தனை காலம்!  நீ எனக்கு புத்தருக்கு வாய்த்தது போன்ற போதிமரம் உன்னிலிருந்து பெற்ற  இப்பிரியத்தின் பெரும் ஞானத்தை பேறாகக் கருதி பொற்றி, போற்றி பாதுகாப்பது எனக்கு வரலாற்றுக் கடமை!  எத்துனை காலத்திற்க்குத்தான் ரோமியோ, ஜூலியட் கதைகள்!! நம் சந்ததிகள் நம் கதைகளைப் பேசட்டுமே! உன்னைப் பேசட்டுமே! உன் மெளனத்தின்  ஆழ்பிரியத்தைப் பேசட்...