அழகியல் அவதானிப்பு
அழகியல் அவதானிப்பு :-
அடுக்கிவைக்கப்பட்ட
அழகுடன்
அலமாரிகள்
துடைத்துவைத்த
தூய்மையோடு
தரைகள்
சுண்ணம்பூசிய
வண்ணம் கலையாதிருப்பது
சுவர்கள்
தூசிபடியாத
மூலை
முக்காலி சிற்பம்
சுருக்கமின்றி
விரிக்கப்பட்ட
படுக்கை விரிப்பு
இவைதான்
அழகியலின்
அவதானிப்பு
அன்று
கை பட்டு கலைந்த
அலமாரிகள்
மூக்கு நமக்க
மூத்திர நத்தமெடுக்கும்
தரைகள்
வண்ணம் கலைந்து
சுண்ணம் கொட்டிய
சுவர்கள்
மூலையில்
வேலையில் இல்லாத
முக்காலி சிற்பம்
அது இதுவென
அனைத்தும் கொட்டிய
படுக்கைவிரிப்பு
இலக்கணம் மாறிய
இதுதான்
இன்றைய
அழகியல் அவதானிப்பு
அவள் வந்ததால்.
Comments
Post a Comment