மனிதர்களா நாம்??? :-

இன்று வடபழனி விஜயா மால் சென்றிருந்தபோது அங்கு சுதந்திர தின கொண்டாட்டத்தை மனதிற்கொண்டு தேசத்தலைவர்களின் படங்களை அவர்களது சிறு வரலாற்றுப் பின்னணியோடு காட்சிப்படுத்தியிருந்தார்கள். அங்கிருந்த பல தலைவர்களின் புகைப்படங்களில் நான் வ.உ.சி . புகைப்படத்தின் அருகிலேயே வெகுநேரம் நின்றுகொண்டிருந்தேன்.அவரது வ.உ.சி. என்ற பெயரின் முழு நீட்சி வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதையும் தெரிந்துகொண்டேன். சுதந்திரப் போராட்டதிற்க்காக தனது சொத்து முழுவதையும் ஈந்து கடைசியில் தனது உயிலில் மளிகைக்கடை பாக்கியை எழுதி வைத்து செத்துப்போன வ.உ.சி. நினைவில் வந்ததுதான் நான் அவரது புகைப்படத்தின் அருகிலேயே நின்றதுக்கான காரணமாயிருக்கும் என இதை எழுதும் போது நினைக்கிறேன். தனது இறுதி நாளில் பெரம்பூரில் வியாபாரம் ஆகாத ஒரு பெட்டிகடையோ மளிகைக் கடையோ வைத்திருந்தார் வ.உ.சி என்று தெரிந்த தருணம் முதல் இந்த நினைக்கும் தருணம் வரை வலிக்கிறது.

நமது சமுகம் தொன்றுதொட்டே இப்படித்தான் இருந்திருக்கிறது.

மனிதர்களே இல்லை நாம்.


Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔