நோய் நிமித்தம்
நோய் நிமித்தம் :-
மரத்தின் இலைகள்
எப்பொழுதும்
ஜன்னல்தொடும் காற்றினை
என்ன இன்னலோ காணவில்லை
அரைத்த மாவு
புளித்துக்கிடந்தது
அழகுவட்ட தோசையாகாது
பல்லிகளும் கரப்பான்களும்
பயமற்று சுற்றித்திரிந்துகொண்டன
அதிகபட்ச சத்தமென்பது
அறைக்குள்
அமைதியாய் சொட்டும்
அந்தத் துளிநீரிடமிருந்துதான்
மின்விசிறி சுற்றும்
மின்சார சந்தத்தை
கவனிக்கப் பழகியிருந்தது காதுகள்
காலனை கனவுகளில்
தரிசிக்கத் தொடங்கியிருந்தேன் நான்
சவக்கலை பூண்டிருந்தது வீடு
அவளுக்கு ஏன்தான்
காய்ச்சல் வருகிறதோ.
Comments
Post a Comment