தொலைத்தல்
தொலைத்தல் :-
:-
எப்படித் தொலைக்க
பழுப்பேறி
பிசுபிசுத்து
கெட்டவாடை தாங்கி
எனக்குத் தெரிந்த
என்னையும்
உலகத்திற்க்கான
என்னையும்
ஒருசேர அழுக்காக்கி
கொண்டிருக்கும்
அதனை...
விண்ணிலிருந்து
மண்ணால்
என்மேல்
பொழிகின்ற
மழைதனில்
நனைந்து நனைந்து
சுரண்டிக் கழுவுகிறேன் -முடிவில்
என்னிலிருந்து அகன்றோடி
மண்ணிலும் பிறகு
விண்ணிலும் கலந்து
மறுபடியும் மழையாக
என்மேல் பொழிவதற்குள்
மழையீரம் துடைக்கவேண்டும் நான்
உன் நினைவுகளைத் தொலைக்க.
Comments
Post a Comment