வாசிப்பும் எழுத்தும்

வாசிப்பும் எழுத்தும் :- 

பண்டித ஜவர்கலால் நேரு பற்றி நட்வர்சிங்கின் "one life is not enough" சுயசரிதைப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தவற்றைஆனந்தவிகடனில் படித்தேன்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், சென்ற ஆட்சி வரை இந்தியாவை ஆண்டு வந்த நேரு பரம்பரைக்கு அடிகோலியவர், இன்றைய இந்தியாவின் முதுகெலும்பாகிய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கரின் உதவியோடு நிறுவியவர் எனப் பல வரலாற்று சாதனைகளுக்கு சொந்தக்காரரான நேரு அவர்களின் இன்னொரு பக்கம் தோல்வியில் துவண்டு வாழ விரும்புவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை அத்தியாயம்.

1922 முதல் 1945 வரையிலான காலங்களில் 10 வருடங்கள் சிறையிலிருந்தது, அப்போது அவரது சொந்த வாழ்க்கையில், மனைவிற்கு  ஏற்பட்ட உடல்நலக்குறைவு, தாய்க்கு மாரடைப்பு, குழந்தைகளை அடிக்கடி பள்ளிகள் மாற்ற வேண்டிய சுழல், இந்திராகாந்திக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, காங்கிரஸ்,காந்தி  உடனான  கருத்து மோதல்கள் என நேரு அவர்கள் உடைந்து அழுத தருணங்கள் அவை என நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகளும் அதனால் ஏற்பட்ட குழப்பங்களும் ஒருபுறம் நேருவை அசைத்தாலும் அந்த சூழ்நிலைகள் தன்னை சிதைக்க விடாமல் இருக்க அவர் எழுதுதலையும், வாசிப்பையும் தான் நம்பியிருந்தார் என்பது நாம் அனைவரும் உணரவேண்டியது. எழுத்தும், வாசிப்பும் எவ்வளவு மேன்மையானவை என உணர்கையில் சிலிர்க்கிறது. இவை இரண்டும் எத்தகைய சிக்கலான சூழ்நிலையிலும் ஒருவனை காக்கும், மீட்டடுக்கும் என மறுபடி உணர்கிறேன் இதனை வாசித்தபோது.

விளையாட்டுத்தனமாகவேணும் இந்த ரெண்டும் என்னோடு இருக்கிறது என்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்.           

"வாழ்க்கை உனக்கு அழுவதற்க்கு ஒரு சூழ்நிலையைக் கொடுத்தால் அதனிடம் சொல் உனக்கு சிரிப்பதற்க்கு ஆயிரம் சூழ்நிலை  இருக்கிறதென"  
என்ற வரிகள்தான் நியாபகம் வருகிறது.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔