சுதந்திர பிரஜைகள்

சுதந்திர பிரஜைகள் :-

சிறப்பு நிகழ்ச்சிகள் 
பார்த்தாயிற்று 
சிறிதாக இனிப்பும் 
விழுங்கியாயிற்று... 

மூவர்ண நிற
கொடியையும் 
தோரணங்களையும் 
பறக்கவும் 
தொங்கவும் 
விட்டாயிற்று... 

சுதந்திரம் தொடர்பான 
பதிவுகள் அனைத்தையும் 
முகப்புத்தகம் முதல் 
தினப்பத்திரிக்கை வரை 
படித்து அலசியாயிற்று... 

வெள்ளைக்காரனது 
வெறியையும் 
வேற்றுமையினை  நம்முள் 
விதைத்ததையும் 
வேண்டுமட்டும்
விவாதித்தாயிற்று...  


வெள்ளைக்காரனுக்கு 
இன்று விடுமுறையில்லை 
என்று பன்னாட்டுக் கம்பெனிக்கு 
பரிதாபமாக 
வேலைக்கு செல்லும்
அவள்களிடம் மட்டும் 
"இனி வெள்ளைக்காரனுக்கு
நீ வேலை செய்ய வேண்டாம்" 
என்று சொல்ல மனம்வராத 
சுதந்திரப் பிரஜைகள் நாம்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்