போதைக்கு அடிமையாகுங்கள்
போதைக்கு அடிமையாகுங்கள் :-
இந்த போதைமனது ஏன் எப்போதாவது வாய்க்கிறது?. ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கையில், வாகனத்தில் பயணிக்கையில், செல்பேசியில் யாரோடோ கதைக்கையில், உணவருந்துகையில், கழிப்பறையில் உட்காந்திருக்கையில் என வாழ்வின் அனைத்து நிகழ்விலும் அடிக்கடி நுழைந்து மகிழ்விக்கும் குழந்தைகள் போன்ற அதிபோதை கவிதை மனநிலை. எப்போதும் எதையும் கவி வடிவமாக்க, மூத்திரம் வந்து முட்டிக்கொண்டு இருக்கிற அவசரத்தோடே அலைகிறேன். இன்னும் ஆழமாக யோசித்து தெளிந்து தியானம் போல் இதில் மூழ்கவேண்டும். அதற்க்கு இன்னும் நிறைய வாசிக்க வேண்டும், எழுத நிறைய யோசிக்க வேண்டும். முடிவில் எழுத்துதியானம் என்ற ஒன்றினை
கண்டறிந்து நான் வடிவமைத்தாலும் வடிவமைக்கலாம். யார் கண்டது.!!! சிறுவயதில் காலி தீப்பட்டி நுனியில் சணலினை கட்டி இழுத்துச் சென்றது போல் இழுத்துச் செல்கிறது இந்த போதை. வாலிபத்தில் வரும் காமத்தின் போதையைவிட இந்தப்போதை அலாதியானது. ஆனந்தமானது.
வாசித்தோ வருடியோ அடிமையாக இணைந்திருங்கள் இந்த போதையோடு.
Comments
Post a Comment