நப்பி சாமான்யன்

நப்பி சாமான்யன் :-


உரக்க பெய்துகொண்டிருந்தது
வெளியில் மழை
உள்ளேயும் 
உசுப்பேத்துவதுபோல்...

உடுப்பு தொப்பலாக
உள்ளம் நனைய
உருகும் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டு
மழையில் நனைய
ஓவ்வொரு முறையும் ஆசை...

மழையில் நனையின்
சளிபிடித்து
ஜன்னி வந்தால்
செலவுக்கு எங்கே போக
எனச் சிந்தித்து
ஒவ்வொரு முறையும்
நகரத்து மழையை
நழுவவிடும்
நப்பி சாமான்யன் நான்
சினிமா கதாநாயகர்களைப் போலன்றி.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔