நீயா நானா
நீயா நானா :-
அதிகாலை
ஆறுமணிக்கே
எழுந்துவிடுவாள்...
எல்லோருக்கும் காப்பி
பூட்டிஆச்சிக்கு
தனக்கும் ஒரு காலையுணவு
மகனுக்கும், மருமகளுக்கும்
பேத்திக்கும் வேறொரு காலையுணவு...
பகல் பதினோரு மணிக்குள்
மதிய உணவு பின்பு
வீடு கூட்டல்
மாவு அரைத்தல்
பொடி திரித்தல்
பேத்திக்கு உணவூட்டல்
என இரவு பத்துமணிவரை
தொடரும் வேலைகள்...
எல்லாம் முடித்து
கையும்,காலும்
உளைவதாக
தனக்குத்தானே தைலம்
தேய்த்துக் கொண்டிருப்பாள்
சுயவிருப்ப ஓய்வு எடுத்தும்
சும்மா ஓய்வெடுக்காத அம்மா...
நாங்களெல்லாம்
நாள் பூராவும்
நீயா நானா
பார்த்துக்கொண்டிருப்போம்.
Comments
Post a Comment