மூன்றாம் ஆண்டில் வேலுவின் கவிதைகள்
மூன்றாம் ஆண்டில் வேலுவின் கவிதைகள் :-
இப்பொழுதான் ஆரம்பித்தமாதிரி இருந்த இரெண்டாம் ஆண்டு முடிந்து நேற்றோடு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன். நிறைய மாற்றங்கள், நிறைய கற்பிதங்கள் என ஒரு முதிர்வினை தந்துள்ளது எனக்கு இரெண்டாம் ஆண்டு. கவிதை தொடர்பான சில பெரிய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது ஒரு பெரிய வரம். அவர்கள் மூலமாக எனது கவிதைகளை திருத்திக்கொள்ளவும், நான் தேடிக்கொண்டிருந்த அடுத்தக்கட்டம் தொடர்பான அறிவினையும் பெற முடிந்தது. நன்றிகள் அவர்களுக்கு. நான் இங்கே யாரையும் குறிப்பிட்டுச் சொல்லப்போவதில்லை.ஏனெனில் எல்லா நண்பர்களுமே ஏதோ ஒருவகையில் இந்த கவிதை வருடத்தை நகர்த்த உதவி புரிந்திருக்கிறார்கள். அனுபவங்களும், பகிர்வுகளும், சிந்தனைகளும் என எல்லாவற்றையும் நான் எனது சூழலிலும், சுற்றியுள்ள மனிதர்களிடமும் இருந்தே கிரகித்து கவிதையாக கிறுக்கியுள்ளேன். எனவே எல்லோருக்கும் நன்றிகள்.
நன்றிகள் உங்களுக்கு.

எனது சில கவிதைகள் சில திருத்தங்களுக்குப் பிறகு திரு.அபிலாஷ் அவர்கள் நடத்தும் இணைய மாத இதழான இன்மையில் வெளியானது. இது எனது முதல் பிரசுர அங்கீகாரம். பெரும் நன்றிகள் இன்மைக்கு. எனது கவிதைகளை மட்டுமின்றி இன்னபிற பாதிக்கின்ற விஷயங்களைப் எழுதி பாதுகாக்க வலைப்பதிவு (BLOG) (கவிதைக்காரன் - http://zoanpapdi.blogspot.in/) ஆரம்பித்ததும் எனக்கு இந்த இரெண்டாம் ஆண்டில் முக்கியமானதொரு நிகழ்வு.
சிலர் டைரி எழுதுவதைப்போல, பின்னொரு முதுமை நாளில் என்னை, என்னுடைய கடந்த காலத்தினை இந்த என்னுடைய எழுத்துக்கள் நியாபகப்படுத்தும் என்ற சிறிய ஆசையோடே இதனைச் தொடர்ந்து செய்ய விழைகிறேன். என்னை இந்த உலகம் ஒரு சிறிய மளிகைகடைக்காரனப்போல், பூக்கடைகாரனைப்போல், இன்னும் எத்தனையோ காரன்களைப்போல் ஒரு "கவிதைக்காரனாக" நியாபகம் வைக்க வரும் ஆண்டுகளில் மெனக்கெடுகிறேன்.
வேல்முருகன் .பா.
சுத்தமல்லியிலிருந்து சென்னை.
Comments
Post a Comment