மீதமிருக்கிற தூக்கம்
மீதமிருக்கிற தூக்கம் :-
அந்தத் தூக்கம்
இன்னும் மீதிமிருக்கிறது...
உன் கனவுகளால்
கலைந்த தூக்கம்
உன் நினைவுகளால்
நிறையாத தூக்கம்
இன்னும் மீதமிருக்கிறது...
உறக்கத்தின் ஆழத்தில்
நான் மரித்துபோய்
மீண்டுவந்த தினநாட்களின்
அந்த தூக்கம்
இன்னும் மீதமிருக்கிறது...
தலையணையை
அழுத்திக் கட்டிக்கொண்டு
அடிவயிறு அழுந்தப் படுத்துறங்கிய
அன்றைய
ஆழ்நிலைத் தூக்கம்
இன்னும் மீதமிருக்கிறது...
உண்டுகொழுத்து
சென்றுசேர்வேனோ எனச்
சிந்திக்க வைத்த
செம்மைத் தூக்கம்
இன்னும் மீதமிருக்கிறது...
உன் காதல் பொருட்டு
காலியான தூக்கம்
வாழ்தல் முடியும் வரை
வசப்படாது
இன்னும் இன்னும்
மீதமிருக்கிறது.
Comments
Post a Comment