புகைப்படங்களும் வாழ்வும்
புகைப்படங்களும் வாழ்வும் :-
புகைப்படங்களும் வாழ்வும் எங்கனம் பொருந்திப்போகின்றன?. எந்த புள்ளியில் புகைப்படங்கள் வாழ்வை இன்றியமையாததாக்குகின்றன?. புகைப்படங்களே இன்றி கழிந்துபோன வாழ்வு எதையாவது இழக்கின்றதா?.
இப்படி புகைப்படங்கள் குறித்த சிந்தனைகள் அதிகம் எழுந்து அலைகழித்ததின் விளைவே இந்த பகிர்வு.
எனது முதல் புகைப்படம் நான் பிறந்த முதலாம் வருடம் எடுக்கப்பட்டது. அதைப்பார்கின்ற போதெல்லாம் நான் என் குழந்தைப்பருவ கற்பனையில் முழ்கிப்போவேன். நான் எப்படி தவழ்ந்திருப்பேன்?.. கை அல்லது விரல்களை சூப்பியிருப்பேனா? எப்படி ஊர்ந்திருப்பேன்? என எல்லாக்குழந்தைகளும் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் நான் எவ்வாறு செய்திருப்பேன் என்ற கற்பனை என்னுள் மிகையாகத் தோன்றி மகிழ்விக்கும். நாம் பிறந்து கடந்து வந்த, நமது நினைவில் இல்லாத நாட்களைப் பற்றிய கற்பனைகளை நமக்குள் பூக்கச் செய்கிற சக்தி ஒரு பழைய புகைப்படத்துக்கு உண்டு. அது மட்டுமின்றி
அந்த வாழ்வியல் சார்ந்த, காலச்சாரம் சார்ந்த எச்சங்களை, விழுமியங்களை
ஒரு புகைப்படம் ஒருநொடிப்பொழுதில் உணர்த்திவிடும். ஆயிரம் வார்த்தைகளும், வரிகளும் சொல்லாத வாழ்வியலை, வசந்த நினைவுகளை,
வரலாற்றினை ஒரு புகைப்படம் எளிதாகச் சொல்லிவிடும்.
எனது இந்தக் குழந்தைப்பருவ புகைப்படத்தினை ஒட்டி எனது தாய் தனது நினைவுகளை கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளுவார். நான் பிறந்த பொழுது கொஞ்சம் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் எங்களது. அந்த உணவின் செழிப்பும், அணிந்திருக்கும் சில பல ஆபரணங்களும் அதை உங்களுக்கும் உணர்த்தும். எனது தந்தையாரும், எனது தாயாரின் குடும்பமும் ஒரு செழித்த நிலையில் வாழ்ந்து வந்ததை சில குறிப்புகள் மூலம் இந்தப் புகைப்படம் உணர்த்தும் என சொல்லிக்கொண்டிருப்பார். எனது ஏனைய உடன் பிறப்புக்கள் பிறக்கையில் இந்த நிலை மாறியதாகவும் அதனை அவர்களின் புகைப்படங்களும் உணர்த்துவதாகவும் சொல்லுவார். இப்படியாக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், சூழ்நிலை எடுத்தவர்கள் பற்றிய தகவல்களையும் உபரியாக சொல்லுவார். இது ஒரு வகையில் நமது வரலாற்றினை தெரிந்து கொள்ளுதல். எனது வீட்டிலிருக்கும், இருந்த ஒவ்வொரு புகைப்படங்களுக்குப்பின்னும் ஒரு கதையும், வரலாறும் இருந்து கொண்டே இருக்கிறது . அதனை தெரிந்து கொள்கையில், இன்றைய எனது சிந்தனைப் பின்னணி குறித்த பரிணாமமும், மரபியல் ரீதியாக எனது வம்சாவழி எப்படி வாழ்ந்து வந்திருக்கிறது அதன் நிறைகள், குறைகள் என்ன? அதனை சரிசெய்வதோ மேம்படுத்துவதோ எவ்வாறு சாத்தியம் என்றெல்லாம் சிந்தனைகள் ஓடி சில செயல் மாற்றங்களை நானே எனது வாழ்வில் செய்திருக்கிறேன். பலநேரம் நாம் அதனை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதே இல்லை, அதற்க்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை என்றவாரே வாழ்ந்து முடிக்கிறோம். சொந்த வரலாறு தெரியாதவன் எப்படி நாடு வந்த வரலாறு, வாழ்ந்த வரலாற்றினை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவான்?. வரலாறு தெரியாமல் எப்படி நாம் நம்மை சுய மதிப்பீடு செய்து கொள்ள முடியும்?. எங்கிருந்து வந்தோம்?, எவ்வாறு வந்தோம்?, நாம் வந்த வேலை என்ன போன்றவை வரலாறு தெரியாமல் எங்கனம் சாத்தியம்? நம் தாத்தனோ, பூட்டனோ டைரி எதுவும் எழுதிவைக்கவில்லை. தங்கள் வாழ்வியல் வரலாற்றை யாரிடமும் வருங்கால சந்ததி கருதி மெனக்கெட்டு சொல்லியும் செல்லவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் அதிகபட்சம் ஒன்றே ஒன்றுதான். புகைப்படங்களாக சிறிய அளவில் பதிவு செய்து வைத்தது. இன்றும் கிராமங்களில் இல்லங்களின் தாசால் என்று சொல்லப்படுகின்ற வரவேற்பு அறைகளின் வரிசையாக சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டு இருக்கின்றவை வெறும் புகைப்படங்களல்ல. நமது சொந்த வரலாறு. அவற்றில் தெரிபவை நமது மூதாதையர்களின் முகங்கள் மட்டுமல்ல. அவர்களின் வாழ்வும், வசதியும் அந்த வேர்களின் விழுமியங்கள் நாம் என்ற பறைசாற்றுதலும் தான் .
குறைந்த பட்சம் வாழ்வின் நிகழ்வுகளைப் புகைப்படங்களாக பதிவு செய்தலும், அதனைப்பாதுகாத்து ,பழக்கமாக புரிதலோடு எதிர்கால தலைமுறைகளுக்குச் பாதுகாக்கச் சொல்லிக்கொடுத்தலும் வாழ்தலை இன்னும் மேம்படுத்த உதவும் என நான் நம்புகிறேன்.

Comments
Post a Comment