அவனும் அவளும் :-

விசித்திர புனைப்பெயர் வைத்து
எப்போதும் கூறிக் கொண்டிருப்பான்
அவன் அவளோடு
எப்பொழுதும் பேச விழைந்து
அழைத்துக் கொண்டிருப்பான்
அவன் அவளோடு
எப்பொழுதும் கனவுகளில் வாழ்வதாய்
கற்பனையில் உறங்கிக் கொண்டிருப்பான்
அவன் அவளோடு
உன்னை சந்திக்கட்டுமா என்று
சண்டையிட்ட வண்ணமிருப்பான்
அவன் அவளோடு
தவறுகளையும், புரிதல்களையும்
விவாதித்த வீம்பிலிருப்பான்
அவன் அவளோடு
அவளுக்கு தெரிந்தே
அவளில்லாது
காதலித்துக் கொண்டேயிருப்பான்
அவள் அவனை
உள்ளம் நிரம்ப
உலகிற்க்குத் தெரியாது
உண்மையாக விரும்பிக்
கடந்தவண்ணமே இருப்பாளென்ற
ஏகாந்தத்தில் எப்பொழுதுமிருப்பான்.
Comments
Post a Comment