மழைநாள் நினைவுகள் :-
இத்தகைய பிற்பகல்
மழை நாளில்தான்
நீ என்னோடு
மௌனித்துக் கொண்டாய்
உன் பேச்சினை
நினைவுபடுத்துவது போல்
விட்டு விட்டு
தூறிக் கொண்டிருக்கிறது
இந்த சாரல் மழை
ஈரம் படிந்த காலையில்
எழுந்த சூரியனைப்
பார்த்தேன்
நீ குனிகின்ற
நியாபகம் வந்தது
என் படுக்கையறை
சன்னலுக்கு வெளியே
மழைச் சத்தம்
கேட்கையிலெல்லாம்
உறக்கத்திலும் உதிக்கிறது
உன் சார்ந்த கனவு
உன்னுடனான காதலை
முதலில் உணர்ந்த பொழுது
அநேகமாக மழைநாளாய்
இருந்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment