கனவுகள் தொலைத்த ஒருத்தி :-



கரையா அலையா 
கடப்பது எதுவென 
கணநேரம் குழப்பும் தொலைவில்  
கடற்கரையில் கண்கள் 

சுற்றும் முற்றும்
பார்த்தபடி
பேசிக்கொண்டிருந்த
பலூன்காரனையும் 
கடலை விற்பவளையும்  
நீளும் நாவலின் 
சுவாரஷ்யத்தோடு  
வாசித்துக் கொண்டிருந்தார்கள்
வயோதிகர்கள் பலர் 

எங்கிருந்தோ 
ஓடிவந்த கொஞ்சம் 
முதிர்ந்த குழந்தை
காற்றின் போக்கில்  
எங்கேயோ ஓடிக்கொண்டிருந்த 
பட்டத்தை துரத்திக் கொண்டிருந்தது  

காற்றில் ஆடும் 
அலையின் ஓசையைவிட 
ஆனந்தமாய் இசைத்தது 
பஞ்சுமிட்டாய்க்காரனின்
பக்குவமான மணியோசை 

உலராத நிறத்தில் 
உதட்டு சாயமிட்டு - நெஞ்சம் 
உலுக்குமாறு புடவைக்கட்டி
உறுத்தும் மல்லிப்பூ வாசனையிழுக்க
உண்ணவரும் அவன்களுக்கு 
உடலை பந்திவைக்க 
உறுதியோடு காத்திருக்கிறாள்

கனவுகள் தொலைத்த
கண்களோடு  
கடற்கரை
கண்ணகிசிலைக்குப் பின்னால் 
தினமும் அந்த ஒருத்தி. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔