அடுத்த ஞாயிறு :-




அடுத்த ஞாயிறு
இந்த ஞாயிறு போல்
இருக்கப் போவதில்லை

நான்குச் சுவர்களுக்குள்
நான் மட்டும் தனியே
விழிக்கிற நிகழ்வு
விபரீதம் போல நிகழும்

கடன்களை கழிக்கையில்
காற்றில் சுழல்வது போல்
நினைவுகளில்
சுழல்கிற மனது வாய்க்கும்

உண்ணுமுணவு
உணவுக் குழலுக்குள்
இறங்குகிற உணர்வை
உணரும் நிசப்தம்
நிகழும்

கைபேசியே கதியெனக்
காத்துக் கிடக்கும்
கனத்துக் கிடக்கும்
கணங்கள் கடக்கும்

இரவுகளில்
உடல் உறங்கி
மனம் விழிக்கும்
மகிழ்வற்ற கனவுகள்
தோன்றும்

பிழைக்கத் தனியே
போகப் போகும்
அந்நியதேசத்தில்
பிறக்கும் அடுத்த ஞாயிறு
இங்கிருக்கும்
இந்த ஞாயிறு போல்
இம்மியளவும்
இருக்கப் போவதில்லை. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔