இறங்காத அவள் :-
சன்னமான பேரூந்து நிலைய
இரைச்சலோடுதான்
அவள் அழைப்புவருகிறது
பெரும்பாலும்
இந்நாட்களில்
பேரூந்து நிலைய இரைச்சல்
இசையின் வடிவமே
என இப்பொழுது
உணர ஆரம்பித்திருக்கிறேன்
நீங்களும் உணரலாம்
ஆனால் அவள்குரலின்
பின்னணியில் அது
கேட்க வேண்டும்
அவள் அமரும் இருக்கையும்
நிற்கையில் பிடிக்கும்
பிடிக்கம்பியும்
நான் கனவிலும் பழிக்கும்
காரியப் பொருட்களாகின்றன
நடத்துனரின் பெருங்குரலும்
சக பயணியரின் நகையொலியும்
சங்கீதமாயொலிக்கின்றன
அவள் பேச்சுக்கு
அவை பின்னணி இசையாவதால்
பேரூந்து ஏறிப்
பேசத் தொடங்கியதும்
இங்கேயும் ஏறி
அமர்கிறாள்
நிறுத்தம் வந்தததும்
பேரூந்திலிருந்து
இறங்கிச் செல்லும் அவள்
இங்கிருந்து மட்டும்
இறங்குவதேயில்லை!
Comments
Post a Comment