அதே நாள் :-
வாழ்வியல் கேள்விகளுக்கு
வழிகிடைத்து வருகையில்
வாழ்க்கையின் பயணத்தினை
வந்துணர்த்திய
அதே நாள்.
இரு பெரும் பேரூந்துகளில்
இடையரப் பயணித்து
இறங்கி கடந்து
இன்முகம் காணக் காத்திருந்து
இதயம் வெடிக்க
இனிதே கண்ட
அதே நாள்
வெப்பம் மிதக்கும்
சாலைகள் போல்
கொதித்துக் கிடந்த
கொல்மனத்தை
அடக்க முயன்று அடிமையாகி
அடைபடக் காத்திருந்த
அதே நாள்
காத்திருப்பும்
காண்கின்ற பிடிப்பும்
எத்துணை வலியது
என உணரவைத்த
அதே நாள்
கைகள் குலுக்கி
கண்கள் சறுக்கி
காதல் கடத்திய
அதே நாள்
உண்ட கூழ்போல்
உருகி வழிந்து
உணவு மறந்து
நினைவுகள் செறிக்க
நீண்ட தூரம் பயணித்த
அதே நாள்
ஆண்டுகள் கடந்தும்
ஆழத்தில் உணர்ந்தும்
அனைநலம் கருதி
அன்பில் மட்டும் உணர்த்தும்
ஆத்மாவைச் சந்தித்த - இன்று
அதே நாள்.
Comments
Post a Comment