அந்தச் சுடிதார் :-
மூன்றொரு மாதங்களாய்
மூச்சுமுட்ட யோசித்த பிறகு
முடிவெடுத்தோம்
எப்படியும் வாங்கிவிடுவதென
தி,நகரிலும், மைலாப்பூரிலும்
சல்லிசாகக் கிடைப்பதாக
சந்தடி சாக்கில் பேசும்போது
சக நண்பர்கள்
எனக்கும் அவளுக்கும்
சொன்னார்கள்
நான்கு, வாரஇறுதி நாட்கள்
இணையத்திலும்
இங்கும் அங்குமாய்
பல கடைகளிலும்
ஏறி இறங்கி
தள்ளுபடி, தரமென
ஏகப்பட்ட விசயங்களை
விசாரித்தோம்
முடிவில் கடையையும்
கவ்வும் நாளையும்
காசையும் தீர்மானித்து
வாங்கியும் வந்து
வாஞ்சை போக
பயன்படுத்தியும் ஆயிற்று
மூன்று மாதங்கள் கழித்து
முச்சந்தியில்
காற்றில் பறந்த
கைப்பிடித்துணியாய்
கந்தலாக அந்தச் சுடிதாரைப்
பார்க்கையில்
மனம் என்னவோ செய்கிறது.
Comments
Post a Comment