அன்றைய கன்னி :-
ஜன்னல் வழி
சுட்டெரித்த சூரியனை
புறந்தள்ளி
இருவரும் தனித்தனியே
எழுந்து தொடர்ந்த
யாருமற்ற சாலையில்
தொடங்கிய பயணத்தில்
யாருமற்ற அறையில்
தொடர்ந்த பயணத்தில்
நீ நானாகவும்
நான் நீயாகவும்
மாறித் தொலைகையில்
சூரியன் நாணி
சுவடற்றுப் போயிருந்தான்
எண்ணம் தெளிந்து
எழுந்து நகலுகையில்
ஆதிமனிதனை
ஒத்திருந்தோம்
ஆப்பிளைக் கடித்த
ஆதாமும் ஏவாளுமாய்
நின் நிர்வாணத்தை
பின்னிருந்து ஒளிர்ந்த
பேரிருள் அழகாக்க
மீண்டும் தொலைந்தேன்
மீளாது உனக்குள்
குற்றவுணர்வு
குடைந்திருக்கும்
கனவு அதன் பின்
கண்ணில் வருவதேயில்லை - அன்றைய
கன்னியைப்போலவே.
Comments
Post a Comment