பாதங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் :-


தினமும் வீட்டிலும்
வீட்டின் அருகாமையிலும்
மொட்டைமாடிகளிலும்
வாசல் வாராண்டாக்களிலும்
சலிக்காமல் அழைந்து
விளையாடி வருகின்றன

இந்த அத்துணை
இடங்களும் என்போலன்றி
அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்
மென்மிதிப் படுகையில்
மெல்லென சாபவிமோசனங்கள்
பெறுவதால்

அலைகின்ற பாதங்களை
அழகாய் படம்பிடிக்க
அதனோடு அலைகையில்
சிற்றெரும்பொன்று
சிரித்தவாரே
மயங்கி கிடந்தது
அதனழகில் அதனடியில்!!

சின்னஞ்சிறுவயதில் எனது
கன்னங்களிலும் நெஞ்சத்திலும்
ஏறி மிதித்தது - நான் இன்றும்
இளமையாயிருக்க
காரணமாயிருக்குமோ என்னவோ!!

இன்றும்
இரவுகளில்
இழி கனவுகள்
பிடிக்காதிருக்க
தலையை அதனருகே வைத்து
தன்மையாய்
தடவியாவரேதான் உறங்குகிறேன்

நான் அவளின்
இந்தச் சின்னஞ்சிறிய
பாதங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔