Posts

Showing posts from October, 2014

கிராமத்து வீடு

Image
கிராமத்து வீடு :- காரிருள் சூழ்ந்த இரவில் கண்கள் விரிய  ஜனனபுரி இல்லத்தில்  ஜன்னலருகே விழித்திருக்கிறேன்  சட்டம் தேய்ந்த  புகைப்பட கண்ணாடியில்  சொருகப்பட்டிருக்கும்  அவளின் படம்  எது எதையோ கிளருகிறது  மல்லாந்து படுக்கையில்  கண்முன்னிருக்கும்  பனங்கட்டை உத்திரங்கள்  எனது பால்ய கனவுகளைப்  புதுப்பிக்கின்றன  பூஜை சுவரில்  மாட்டியிருக்கும்  முருகன் சுவாமிக்கு  வயது ஏறவே இல்லை  என் போலன்றி   சுண்ணாம்புச் சுவற்றின்  உதிரும் காரைகளுக்கும்  ஏறும் என் வயதிற்கும்  ஏதோ தொடர்பிருப்பதாய்  எண்ணுகிறேன் நான்காம் தலைமுறை தளத்தினை தடவுகையில் மூதாதையர் உடற்ரேகைகளை முற்றிலுமாக உணரமுடிகிறது சாம்பல் வண்ணம் பூசிய  மரக்கதவின் சாவித்துவாரம் வழி  நான் இங்கு கடந்து வந்த  நாட்கள் தெரிகிறதா  என எட்டிப் பார்க்கிறேன் நாராங்கியையும் மர ஏணியையும் அதுவழி ஏறிச்சென்றால்  விரியும் மொட்டைம...

நவுரு

Image
நவுரு :- வராண்டாவில் விளையாட வாய்ப்பளிப்பதில்லை வழுக்கிவிழக்கூடுமென்று மழையில் நனைந்தால் சளிபிடிக்கும் குடையோடு கூட கூடலில்லை இரவில் மொட்டைமாடி எப்போதாவது மட்டுமே இருள் ஏற்படுத்தும் உளவியல் பிரச்சினை எப்போதும் மண்டையில் சாலைகள் ஆபத்தின் சன்னதிகள் சகுனம் பார்த்துக் கூட சம்மதிப்பதில்லை பூங்காக்களில் மெதுவாக விளையாண்டால் போதும் விழுந்து வரும் விழுப்புண் வரவே வராது இனிப்புகள் பல்கெடுக்கும் புளிப்புகள் ஏப்பம் தரும் ஏக எரிச்சலில் இரண்டு வயது அவள் எப்போதும் சொல்வாள்  கொஞ்சம் "நவுரு" என்று. 

துளிக்கவிதை

Image
துளிக்கவிதை :- மழையென்னை எப்பொழுதும் ரசிக்க வைக்கும்  மனதிற்க்குள்  கவிதை  விதைக்கும்  நேற்றும் இன்றுமென  தினமும்  துளிர்க்கின்றன  விண்ணின் துளிகள்  மண்ணை நோக்கி  நான் இமையசைக்கும்  பொழுதிற்க்குள்  எங்கிருந்தாலும்  இரெண்டொருதுளிகள்  நனைத்து விடுகின்றன  சாலைவழி சலசலக்கும் நீரில்  சற்றே கால்கள் பட்டதும்  சிரசில் சிறுகவிதையொன்று  சட்டென முளைக்கிறது மற்ற காலங்களில் அவளோடு  கைகோர்த்து நடக்கும் நான்   மழைக்காலங்களில்  துளியோடு கோர்க்கிறேன்  மழை நினைப்பை  தள்ளிவைத்து  மற்ற நினைப்பை எண்ணிக் கொள்ள நினைக்கையில்  கோபத்தில்  கொட்டித்தீர்க்கிறது  மறுபடியும் மழை  புவிக்கும் உள்ளேயும் அதனால்  எனக்கு உள்ளேயும்.

கற்பிதங்கள்

Image
கற்பிதங்கள் :- விரும்பி வாங்கிய காலணிகளை விடுத்து ஏனைய  வீட்டுப் பிள்ளைகளின்  காலணிகளைத்தான்  தேடி அணிகிறாள் பழச்சாறோ உயர்  பண்டங்களோ  அவள் என்றும்  விரும்பியதில்லை  வீதிக்கடை  விளம்பரமற்ற  பண்டங்களும்  பதார்த்தங்களும்  அறிமுகமில்லாமல்  அவள் ஆர்வம் கொய்கின்றன  வண்ணமிகு  வனப்பாடைகளை விடுத்து  துண்டுகளும் பழைய  துணிகளுமே  அவள் விருப்பாய் இருக்கின்றன  உயர்  பஞ்சுப் பொம்மைகளனைத்தும்  உறங்குகின்றன  உயர்  அரை அறைகளில்  மரப்பாச்சிகளின்  முன்பு  மண்டியிடமுடியாமல்  அவள் தொடர்ந்து  எத்தனையோ கற்பிதங்களை  தன் செய்கைகளின்  வாயிலாக கற்பிக்க விரும்புகிறாள்  முழுதும் மூளை  நிரம்பியதான   போலி  நான்  தொடர்ந்து  தவறவிடுகிறேன்  யதார்த்த கற்பிதங்களை. 

இந்தத் தீபாவளி...

Image
இந்தத் தீபாவளி... இப்படித்தான் எப்போதும் முடியும் இந்தத் தீபாவளி எண்ணைச்சட்டியில் தன்னை முக்கி அம்மா வெந்தெடுக்கும் பட்சணங்கள் படைத்து அதட்டி கேட்கும் யார்யாருக்கோ நூறு இருநூறு தீபாவளிக்காசு கொடுத்து அடித்து புடித்து அம்மணமாய் இருப்பதுபோல் ஆடைகள் வாங்கி வெடிவெடித்து பறவைகளுக்கு பகைவனாகி விலங்குகளுக்கு வில்லனாகி சொந்தக்காசில் நாசிக்கு கந்தகச்சூனியம் வைத்து காசைக் கரியாக்கி கவர்ச்சி நடிகைகளும் கனவு நடிகர்களும் சேர்ந்து நடித்த படங்கள் பார்த்து செத்துக் கழியும் இந்த வெத்துத் தீபாவளி போலன்றி விவரமாய் அடுத்தவருடம் கொண்டாடலாம்  என்னும் உறுதிமொழி உல்லாசத்துடன் இப்படித்தான் எப்போதும் முடியும் இந்தத் தீபாவளி.

மழைநாள் நியாபகம்

Image
மழைநாள் நியாபகம் :- சற்றேறக்குறைய பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு மழை நாளில் தெருவில் திரண்டு ஓடிய கலங்கல் நீரில் காகித கப்பல் விடுகையில் அவளைப் பார்த்தேன் நீல வண்ண பள்ளிச் சீருடையில் சிறு கடைக்கோ பேருந்து நிறுத்தத்திற்கோ அவள் விரைந்திருக்கக் கூடும் அறியவில்லை இன்றுவரை நான் அவளை பார்த்துக்கொண்டிருந்த அந்த சில நொடிகளில் எனது கப்பல்கள் சில அடித்துச் செல்லப்பட்டிருந்தன நான் கூடத்தான் தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்து படித்து மேல்நிலையில் பிரிந்து படித்தோம் அவள் பாடத்தையும் நான் அவளையும்   உத்தேசமாக வாய்ப்புகள் தவறியதில் வாழ்க்கை சிதறியதில் வயது குறைந்த அவளை இல்லம் என்கிற அவர்களது அறையில் சந்தித்தேன் கடந்த மழை நாளில்  நான் காதலித்ததோ கவிதை எழுதுவதோ அவளுக்கு எதுவும் தெரியாது எனக்கும்.

குடைக்குள் மழை

Image
குடைக்குள் மழை :- மழையில் நனைகின்ற அவளுக்காய்  ஒரு குடை வாங்கினேன்  நான் மழையில்  நனைவது  உனக்கு பிடிக்கவில்லையா  என்ற அவளிடம்  மழை உன்னை  நனைப்பது  பிடிக்கவில்லை என்றேன். சிரித்துக்கொண்ட  குடையினை விரித்தாள்  குடைக்குள்ளும் மழை!.

டான் ப்ரொவ்னின் தி லாஸ்ட் சிம்பல் (Dan Brown's The Lost Symbol)

Image
டான் ப்ரொவ்னின் தி லாஸ்ட் சிம்பல்  (Dan Brown's The Lost Symbol) :-   டான் பிரவுனின் (Dan Brown) "தி லாஸ்ட் சிம்பல்" (the lost symbol) நாவலை வெகு நாட்களுக்குப்பின் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படித்து முடித்தேன். இந்த ஆங்கில நாவலாசிரியர்களுக்கு இருக்கிற நாவல் எழுதும் திறமை வியப்பளிக்கிறது.  சுவாரஷ்யத்திற்கு குறைவில்லாத நாவல். mysticism, symbology, noetic science, என அமெரிக்காவின் தோற்றத்தினையும் அதனுடன் தொடர்புடைய குறியீடுகளையும் தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதப்பட்ட நாவல். டான் பிரவுன் நிறைய ஆய்வுகளுக்குப் பின் எழுதும் வழக்கமுள்ளவராதலால், நிறைய புதிய தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த நாவலும். பண்டைய எகிப்திய, கிரேக்க, ஹிப்ரு, இந்திய பழமைவாதத்தையும் அங்கங்கே கதையோட்டத்தோடு தொடர்புபடுத்தி தொய்வில்லாமல் எழுதியிருப்பது சுவாரஷ்யம். முடிவில் தொலைந்த ரகசியமாக அவர் குறிப்பிடுவது நமது முன்னோர்கள் காலங்காலமாக சொல்லிவரும் " "மனிதனே கடவுள்" என்னும் விஷயத்தைதான். ஏதாவது புதுசா யோசிக்கலாம் டான் பிரவுன். நாவலாசிரியர் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்...

நனைந்த காகமும், நானும்

Image
நனைந்த காகமும், நானும் :- மழையில் நனைந்த  காகம்தனை பார்த்துவிட்டு  வந்த மகள்  வீடின்றி காகம்   வீணாய் நனைவதைச் சொல்லி  வருத்தப்பட்டாள்  காகத்திடம்  நனைவது குறித்து  கேட்டதாகவும் அதன் அம்மா  வீட்டிலிருந்து  அனுப்பிவிட்டதாகவும்  சொல்லி யோசித்தவள்  காகத்துக்கு  காய்ச்சல் வந்தால்  நம்ம டாக்டர் தாத்தா  ஊசிபோடுவாரா? காகம் மருந்து  குடிக்குமா? என எனக்கு  கடின வினா எழுப்பியவள்   என்ன செய்யலாம்  எனக் கேட்டதற்க்கு படுக்கையறையில்  தனதிடத்தை  காகத்துக்கு  தந்துவிடலாமெனச் சொல்லி  விளையாடச் சென்றாள் காகம் போல்  நானும் நனைந்திருந்தேன்  மழையிலில்லை.

நல்வரவு

Image
நல்வரவு :- பகலில் மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன குளிர்பொருட்டு உடைமாற்றி காப்பியும் கவிதையும் உறிஞ்சிக்கொண்டு மழை ரசித்துக்கொண்டிருந்தேன் மழையில் சத்தத்தை மிஞ்சும் வண்ணம் அருகிலிருந்த குடிசைப் பகுதியில் அநேகம் பேர் கூடி சலசலத்துக்கொண்டார்கள் மழை தன் பொழிவைக் குறைக்கையில் கொஞ்சம் சன்னமாக கடப்பாரையும் மண்வெட்டியும் நிலத்தோடு மோதும் ஒலிகள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன  குடிசையின் அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனமும் கோழிக்குஞ்சும் மூதாட்டியும் தொப்பலாக நனைந்திருந்தனர் சிறிது நேர இடைவெளியில் நான் பெய்த மழையினை வாழ்த்திக்கொண்டிருக்கையில் நனைந்த பாடப்புத்தகத்தை கையிலேந்தி குடிசையிலிருந்து வெளிப்பட்டாள் மழையை பழித்தவாரே ஒரு இளஞ்சிறுமி மழை எல்லோருக்கும் நல்வரவில்லை.

நேற்றடித்த வெயிலும், இன்று பெய்த மழையும்

Image
நேற்றடித்த வெயிலும், இன்று பெய்த மழையும் :- பஞ்சுபொதிகள் சூழ  நெஞ்சம் வியர்வித்த வானம்  பகலை இரவாக்கி  பல் நடுங்கச் செய்திருந்தது  கானல்நீராய் தகித்திருந்த  தார் சாலைகள்  தணல் குறைந்து  தன்மையாய்  அடிக்கடி கிளம்பி  அலறவைக்கும் நாசிப்புழுதிகள்  அடங்கி ஒடுங்கி  அடக்கமாயிருந்தன  அடைமழை வருகையால்  கண்ணாடியில் பார்த்த  முகத்தைவிட  அழகாயிருந்தது  தரைத் தண்ணீரில்  தத்தளித்த முகம் நேற்று அடித்த வெயிலுக்கு  அலுக்கவுமில்லை  இன்று பெய்த மழைக்கு மணக்கவுமில்லை நேற்றுபோல்  இன்று இருப்பதில்லை  என்றுணர்ந்த பல நான்.

மிக்கி மௌசும் நனைந்த சட்டையும்

Image
மிக்கி மௌசும் நனைந்த சட்டையும் :- வழக்கம்போல் மகளை ஏமாற்றிவிட்டு மறைந்திருந்து கிளம்பிச் சென்றேன் அலுவலகத்திற்க்கு மகளை ஏமாற்றிய என்னை மழை ஏமாற்றியது சோவெனப் பொழிந்து கால்களில் சேறும் கைகளில் நடுக்கமுமாய் தொப்பலென நனைந்து தொடுகையில் வீட்டினை எழுந்து வந்த ஏமாற்ற மகள்! யதார்த்தமாய்க் கேட்டாள் "சட்டையில இருக்கிற என் மிக்கியை ஏன் நனைச்ச" என குளிரிலும் கொஞ்சம் கொதிக்க ஆரம்பித்தது!!.

செல்லாக் கதை

Image
செல்லாக் கதை :- ஒற்றைக் கதை   உசுப்பியெழுப்ப  உட்கார்ந்திருந்தேன்  உறக்கம் தொலைத்து  நடுநிசியில் தும்மல் வந்தது  தூக்கம் போலன்றி  அங்கே நீ  அனேகமாக  நினைத்திருக்க வேண்டும்  என்னை உன் விரல்தொட  விழைகிற எனக்கு  விரல்தராது  காதல் செய்ய  கீழ்க்கண்ட கதை சொன்னாய்  அருவிமேல் அளப்பரிய  காதலிருப்பினும்  அருகில் செல்லமுடியாத  பிறப்புக்கு வருந்தாது  ஆயுள்முழுக்க  பார்த்துக்கொண்டே  வாழ்கிற வாழ்வை  வரமெனக் கருதும்  தொலைதூர  சிறு மரத்தின் காதல் கதை அது    நீ நானாகப் பிறந்து -  என்  கண்வழி கண்டு  -  உன்னை  காதல் புரிந்திருப்பின்  தெரிந்திருக்கும்  இந்தக்கதை உனக்கும்   செல்லாதென.   

மிருகதீபம்

Image
மிருகதீபம் :- நேற்று  எறும்பு கடித்த இடத்தில்  இன்று  சொறிவதைப் போலத்தான் ஆரம்பிக்கிறது நத்தைபோல்  மெல்ல ஊர்ந்து ஒட்டுண்ணியாகப்  படர்கையில்  எண்ணையூற்றிய  ஜுவாலையாய்  எரிகிறது  முதலில் எதிர்ப்பும் பின்பு எதிர்பார்ப்பும்  உணர்கையில்  தொலைந்த இரையை  கண்டு கடித்த  காட்டுமிருகமாய் மனம் நெகிழ்த்தி, பிரழ்த்தி  அழுத்தி முத்தத்தால் அணைக்காது  முடிக்கையில் அணைந்தாலும் எரிகிறது  மிருக தீபம்  இன்னொரு விளக்கிலும்.

கவிதாயினி !

Image
கவிதாயினி ! :- எழுதத் தூண்டிவிட்டு  ஏதும் தெரியாதது போல்  கடக்கும் அந்த நிகழ்வு காகிதம் விரித்தோ  கணிப்பொறி திறந்தோ  கற்பனை கோர்க்கையில்  கத்துவாள் மகள்  காரணமின்றி  முதல்வரி தொடங்கி  முற்றுப்பெறாமல்  சத்தம் அமர்த்த  சட்டென ஓடுகையில்  காலடியில் விழுந்து  கவிதைகள் உடையும்  பொறிக்கையிலோ  வதக்கையிலோ  வந்து விழும் வரிகளை  கருகல் பொருட்டு  காவு கொடுப்பேன்  காக்கச் செய்து  அடுப்படைந்து  இடுப்பொடிந்து  போனாலும்  கடுப்படைந்து  காகிதம் விடுவதில்லை  கனவையும் விடுவதில்லை  எல்லாம் முடிந்து  இமைகள் இறுக்குகையில்   சட்டையின்றி விழுபவனையும்  சட்டைசெய்யாது   துளிர்க்கும்  நான் எழுதவே முடியாத  இன்பக் கவிதையொன்று.

பிஞ்சுக்காலம்

Image
பிஞ்சுக்காலம் :- கதிரவன் விழுந்து  கண்கள் திறந்ததும்  ஆரம்பிக்கிறது ஆட்டம்  கடைபரத்தலும்  வீதி துரத்தலுமாக  பொழுதுகள் கடக்க  வீங்கிப்போனதாக  புலம்புகின்றன  முதிய கால்கள்  சிந்திச் சிதறிய  நெய்ப்பருக்கைகளை  அந்திப்பொழுதில்  காக்கைகள்  உண்டு முடிக்கையில்  துயிலெழுந்து  ஆரம்பிக்கிறது  வானம் கறுத்து  வண்ணம் தொலைக்கும்வரை  தொய்யாது தொடரும்  தினசரி இரெண்டாமாட்டம் சிறுஉணவும்  பெருஉணவும்  உண்டுமுடித்து - இரவு  உறங்கப்போகையில்  பிஞ்சுக்கால்களைப் பிடித்தவாறே  முதிர்ந்த கைகள்   ஏங்குகிறது  கடந்துபோன  பிஞ்சுக் காலம்தனை நினைத்து. 

தேங்கிய உறக்கம்

Image
தேங்கிய உறக்கம் :- கண்களில் தேங்கிய உறக்கத்தை கண்ணாடிதனில் பார்த்துக்கொண்டு நான் நேற்றிரவும் விடிந்தபின்பும் பேசிய, கேட்ட பேச்சுக்கள் தேங்கிய உறக்கத்தின் பக்கத்தில் செழுமையாய் முளைத்திருந்தன என்றேனும் ஒருநாள் எவருக்கும் தெரியாமல் முளைக்க அவை உறக்கத்தின் தியாகத்தால் விதைக்கப்பட்டிருக்கலாம் நீண்ட அந்த தேங்கிய உறக்கத்தின் உள் செல்கையில் எண்ணற்ற சிரிப்பொலிகளும் ஏகப்பட்ட கரவொலிகளும் சிறிதும் பெரிதுமாக கண்ணீர் துளிகளும் வாழ்வின் வசந்த நினைவுகளாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன இன்னும் பயணிக்கையில் புசித்துப்புடைத்த வயிற்றேப்பமும் புன்னகைகள் சிதறிய தருணங்களும் நிரம்ப இருந்தன பொறாமையும் பொறையும் அன்பும் ஆங்காரமுமாய் ஏக உணர்வுகள் எங்கும் சிதறிக்கிடந்தன தேங்கிய உறக்கத்தின் விளிம்பில் ஒரு தேவ உறக்கம் வாய்த்திருந்திருக்கிறது. 

காக்கா கவிதை

Image
காக்கா கவிதை :- புத்தகத்தில் எல்லாம் புதைந்திருக்க கைகள் மட்டும் காகங்களுக்கு உணவிட்டுக் கொண்டிருந்தன வந்தமுதல் காகம் வயிறு நிரம்ப உண்டபின் வாய்கூவி அழைக்க வந்துண்டன ஏனைய காகங்கள் நம்போலன்றி! சில புறாக்களும் சிறிது நேரத்தில் வந்தன புறாக்கள், காகங்கள் போல் கண்டதையும் உண்பதில்லையென கவனித்ததில் தெரிந்துகொண்டேன் ரசனைவாதிகள் என்போன்று! காகங்கள் சண்டையிட புறாக்கள் பயந்தோடின நான் அசையவேயில்லை சிறுவனாயிருந்தும்! புறாக்களின் உடலமைப்பும் செயல்பாடுகளும் அழகானவை காகங்கள் போலன்றி குரங்கிலிருந்து வந்த நமக்கு காகங்கள் தான் மூதாதையர்கள் கடுகளவும் சந்தேகமேயில்லை!  

கவனிப்பும் கவிதையும்

Image
கவனிப்பும் கவிதையும் :- மஞ்சள் வண்ண நிலவை  நீல வண்ண வானில்  சற்று முன்பு பார்த்தேன்  இப்பொழுது  நிலவு வெண்ணிறமாகி  வானம் கருநிறமாயிருக்கும்  நிறங்கள் அனைத்துமே  ஒளிச் சிதறல்களின்  நிகழ்வுகள் எனத்  திடீரெனத் தோன்றியது  காரணம் புரியவில்லை  கருப்பும் வெள்ளையுந்தான்  ஆதி நிறங்கள்  ஏனையவையெல்லாம்  இவ்விரண்டின்  இடைச்சிதறல்களே எனவும்  கால்களில் நின்றிருந்த  கருநிறக் காக்கை  கண்ணொற்றி ஏளனமாய்  பார்ப்பதுபோல் இருந்ததவும்  காக்கைகள் அமருமா எனவும்  திடீரெனத் தோன்றியது  காரணம் புரியவில்லை வெயிலுக்கு அஞ்சி  ஒதுங்குவதுபோல்  நிலவுக்கு அஞ்சி  ஒதுங்கிப்பார்த்தேன்  சூட்டைப்போல குளிரும் வதைத்தது  வந்த காய்ச்சல்  போகாமலிருக்கலாம்  கிளம்புமுன் நிலவை  கருவி கொண்டு  கண்கிட்டப் பார்த்தேன்  பருக்கள் வந்த பருவப்பெண் வதனம் போன்றிருந்தது  தூரம்தான் அழக...

அவனாகிய அவள்

Image
அவனாகிய அவள் :- அவனென்பதா  இல்லை வரலாற்று வழி  அவளென்பதா இருக்கட்டும்  அவனென்றே விளித்து  அவனைக் கவனிப்போம்  துயிலெழுந்து மேலெழும்பிக் கொண்டிருந்தான்  நான் அவனாக்கிய  வரலாற்று அவள் வந்தவன் பிம்பம்  வழிந்தோடிய இவனில் தெரிய  பதறியடித்து ஓடினேன்  பதிவு செய்ய கணினி வேண்டி  கையில் கணினியேந்தி   காலால் நடந்து வருகையில்  தணிக்க இயலா  தன்மமாய் குளிர்ந்திருந்தான் தன் நிழல் பிம்பத்தோடு   வார்த்தைகள் தேடி  வரிகள் சரிசெய்து  பதிவை பத்திரப்படுத்துகையில்  இவனாகிய தெளித்த நீரும் அவனாகிய அந்திநிலவும்  மறைந்து போய்  மணத்துக்கொண்டிருந்தார்கள் - நான்  பதிவு பண்ணிய - இந்தப்  பத்திரக் கவிதையில். 

உரையாடல்

Image
உரையாடல் :- இரட்டை தலையணை தலைக்கு கொடுத்து இடவலமாக ஆடும் வீட்டிலிருந்து அந்த வேப்பமரத்தினை பார்த்துக் கொண்டிருந்தேன் காற்றில் ஓரிலை கடந்து வந்து என்னருகில் வீழ தாலாட்டும் ஊஞ்சலாய் வீடு தகவமைப்பு பெற்றிருந்தது வேம்பசைகையில் வீடசைவதாய் நொடிப்பொழுது உணர்ந்த தருணம் - ஒரு கவிதை தந்ததை வேம்புக்கு எப்படியாவது சொல்லவேண்டுமென விழைகையில் என்னருகே வீழ்ந்த இலை வந்த இடம் நோக்கி வழி பெயரத்தொடங்கியிருந்தது.

ஆறாம் பூதம்

Image
ஆறாம் பூதம் :- தீக்குள் விட்டு விடும்  எத்தனிப்பு எப்பொழுதும்  கொட்டும் மடமழை  கொன்றுவிட தள்ளுதலும்  சூறாவளி சுற்றித்தின்றிட  சூடமேற்றித் தருதலும்  நிலப்பூகம்பம் எங்குவரினும்   நின்றுகொண்டு அழிய விழைதலும்  இடி, மின்னலென  ஆகாய ஆபத்துகளை  அன்பொழுகத் தேடுதலும்    வாய்க்கிறது எனக்கு  நீ நின்ற இடம் நின்று கொண்டு  தந்து சென்ற  காதலாகிய  ஆறாம் பூதத்தை   நினைக்கையிலெல்லாம். 

வாழ்கிறோமா நாம்? -1 (Are We Living? -1) :-

Image
            வெளியில் கிளிகள் கீச்சிட்டதாலும், மனதில் ஏதேதோ கீச்சிட்டதாலும் எழுதுகிறேன்  இந்தப்பதிவை.             சில பல மனிதர்களோடு நடந்த உரையாடல்கள் வழி     வந்த சிந்தனைகள் இவை.               பெரும்பான்மையான சந்திக்கும் நபர்களும், நண்பர்களும் அவர்களது பகிர்தல்களும் எனக்கு "வாழ்கிறோமா நாம்???" என்கிற கேள்வியினை தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கிறது பல வழிகளில். சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடைய தாயார் இறந்துவிட்டார். சென்றிருந்தேன். அத்தருணத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் தனது தாயாருடன் கடந்த இரண்டு வருடங்களாக பேசவில்லையென்றும், அந்தக் குற்றஉணர்ச்சி கொல்கிறது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். பேசாததற்க்கு காரணமாக அவர் கூறியது சற்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும் இரண்டு வருடங்கள் மிகஅதிகம் என்றே எனக்குத் தோன்றியது. இப்போது அந்த பேசாத தாயார் பேசுவதற்க்கே இல்லாமல் போய்விட்டார். இறுதி வரை நீளும் இந்தக் குற்றஉணர்ச்ச...