செம்மொழி (காதலர்) பூங்கா, சென்னை -86

செம்மொழி (காதலர்) பூங்கா, சென்னை -86 :-



     சென்னையில் காதலர்கள் பெருகிவழியும்! அளவிற்கு அவர்கள் சந்தித்து காதல் வளர்ப்பதற்கான இடங்கள் தேவையான அளவிற்கு இல்லாததது வருத்தமே!. எல்லாவற்றிக்கும் ஏதேதோ சங்கங்கள் தோன்றி
போரடுவதுபோல், காதலர் சங்கமொன்றினை தோற்றுவித்து சங்கமத்துறைகளுக்காக காதலர்கள் அரசிடம் போராடலாம்!.

     செம்மொழிபூங்காவிற்கு புகைப்படம் எடுக்கவேண்டி சென்றிருந்தேன். அது செம்மொழிப் பூங்கா என்பதைவிட செம்மொழி காதலர் பூங்கா என்பதுதான் சரியாக இருக்கும். வந்திருந்த அத்துணை பேரும் ஜோடிகளே..ஜோடிகளே ..ஜோடிகளே. எல்லா பத்து அடிகளுக்கும் ஒரு ஜோடிகள் இருப்பின் எப்படி புகைப்படம் எடுப்பது.? இருந்தும் எடுத்தேன். என்ன செய்ய. நுழைவுக் கட்டணம் எனக்கு ரூ.15, காமிராவுக்கு ரூ.50, இருசக்கர வாகனம் வாகனம் நிறுத்த ரூ.15. கொஞ்சம் காஸ்ட்லி பூங்கா. காதலர்களை வைத்துதான் பூங்கா ஓடிக்கொண்டிருக்கிறது போலும். சிறுவர்கள் விளையாட தரமான சிறு விளையட்டுப்பகுதியொன்றும் இருக்கிறது. கொஞ்சம் புகைப்பட ஆர்வலர்களும், சினிமா படபிடிப்பு மாதிரி நிகழ்வுகளும் நடக்கின்றன. ஏனைய அடியேனுக்கு தெரியாத நிகழ்வுகளும் நடப்பதாக சொல்லப்படுகிறது!.

     மேட்டருக்கு வருவோம். எல்லா ஜோடிகளும் அனுமதிக்கப்படாத மறைவுகளைத் தேடிபிடித்து பதுங்கியிருந்தனர். மறைவுகளை தேர்வு செய்வதில் எல்லோருக்கும் மிக நல்ல அனுபவம் இருக்க வேண்டும்!. நாமெல்லாம் யோசிக்கவே முடியாத அளவுக்கு தேர்வு செய்றாங்கப்பா!. அதில் ஒரு ஜோடி இந்த மிலிட்ரி டிரஸ் மாதிரி புதர் நிறத்திலேயே ஆடைகளை அணிந்திருந்தனர், கிட்டப் போற வரைக்கும் ஒண்ணுமே சத்தியமா தெரியல. என ஒரு வில்லத்தனம்!. ஏதாவது ஒரு கோணம் நன்றாக இருக்கிறதே என்று அங்கே போகஸ் செய்தால் மறைந்திருக்கும் ஜோடிகள் சலசலப்போடு சத்தமெழுப்பி முறைக்கின்றனர். ( புதர்ல பாம்பு கீம்பு இருந்து கடிச்ச கூடப் பரவாயில்லை போல, இவங்க மொறைக்கிற மொற இருக்கே..பயங்கரம்). சிவபூஜையில் எதற்கு கரடி என்று வேறொரு பக்கம் திரும்பினால் அங்கேயும் அதே கண்கள்! அட போங்க பாசு என்று வீடு திரும்ப நினைத்தால் கட்டணங்கள் நியாபகம்வந்து கடுப்பேத்துகின்றன.

      மற்றபடி மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, செதுக்கப்பட்ட பூங்கா. மிக அழகாகவும் முடிந்தவரை பராமரிக்கிறார்கள். உள்ளே செயற்படும் கேண்டீன் அவ்வளவு சிறப்பாக இல்லை. குடும்பத்துடன் கண்டிப்பாக சென்று வரலாம்.
உட்லேண்ட் டிரைவ் இன் என்று புதர் காடாக இருந்த இடத்தை இப்படி அழகிய பூங்காவாக மாற்றிய கடந்தகால கலைஞர் அரசுக்கு நன்றிகள்.

    குறிப்பு : இந்தப்பதிவில் நான் காதலர்கள் குறித்தோ, காதல் குறித்தோ கருத்துகள் எதுவும் தெரிவிக்காதது இயல்பாகவே நிகழ்ந்துள்ளது!!!.அங்கு பெற்றோர் வயதுள்ள சிலரும் வந்திருந்தனர். அவர்களை நான் சரியாகவே பார்க்கவில்லை எனவும், அவர்கள்  இந்த ஜோடிகள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது என்ன நினைத்திருப்பார்கள் எனவும் நான் யோசிக்கவே இல்லை என்றும் உளமார உறுதி கூறுகிறேன்!!!. இது பழைய பூங்காதானே, நாங்கதான் ஏற்கனவே  போயிட்டு வந்திருக்கோமே என நினைப்போருக்கு ஒரு செய்தி. Blogger இப்போதுதான் சென்று வந்துள்ளார் என்பதுவும், என்னது செம்மொழிப் பூங்காவா அது எங்க இருக்கு? எனக் கேட்கும் இன்னும் தனிமையிலே ஜோடியின்றி திரியும் உள்ளங்களும் அதிகமுள்ளதால் இந்த பதிவு அவசியமாகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!.   

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔