ஜன்னல்வழி மழை ரசித்தல்
ஜன்னல்வழி மழை ரசித்தல்:-
ஜன்னல்வழி மழையை கவனித்தல் ஏன் இன்றும் எல்லோருக்கும் சுவாரஸ்யமாய் இருக்கிறது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இல்லத்தின் எல்லோருமே ஏதாவது சிலநிமிடங்கள் ஜன்னலோர மழையை
கவனிப்பதை, ரசிப்பதைப் பார்க்கிறேன். எனக்குள் இருக்கும் கவிதை என்னை மழை நோக்கி இழுக்கிறது, இல்லை மழை என்னுடைய கவிதையை இழுக்கிறது. எனக்கு ஏதோ நடப்பதுபோல் எல்லோருக்கும் ஜன்னல்வழி மழை பால்யத்தையோ, காதலையோ, பதின்பருவ நினைவுகளையோ, பள்ளித் தோழமைகளையோ எதையோ, எங்கேயோ தேக்கி சேமித்து வைத்திருந்த நினைவுகளை இழுத்து வந்து இமை முன் நிறுத்தி நனைக்குமென நினைக்கிறேன்.
இதை ஏன் ஜன்னல் வழி மழை செய்யவேண்டும்?. ஜன்னலின் அமைப்பு கட்டம் கட்டமாக இருப்பதற்கும் உளவியலுக்கும் ஒரு ஒருங்கிணைவு இருப்பதாக நினைக்கிறேன். வாழ்வின் பல்வேறு கட்ட நிகழ்வுகளை, ஜன்னலின் இந்த அமைப்புகள் நியாபகப்படுத்தி ஒருங்கிணைத்து ஒரு அக மகிழ்வினை தருமென உணர்கிறேன். மழையின் வேகத்திற்கு ஏற்ப மனநிலை மாறுவதையையும், வேகம் அதிகரிக்க அதிகரிக்க மனதுள் நினைவுகளின் ஓட்டத்தில் ஒரு மாறுதல் ஏற்படுவதையும், குறைகையில் வேறோருவிதமாகவும் மனம் லயிப்பதை உணரமுடிகிறது. இது ஏன்? இப்படி மழைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு, தேவைகளைத் தாண்டி ஆதிகாலந்தொட்டு இருந்து வருகிறது. நம் முன்னோருக்கு இருந்த மழை பற்றின புரிதல்களை நாம் தொலைத்து வந்திருக்கிறோம். எனது கிராமத்தில் சொல்லப்படுகின்ற சில தகவல்கள் நினைவுக்கு வருகின்றன. மழை பெய்யும் காலத்தைப் பொறுத்து அதன் வீரியத்தை கணிப்பதுவும், மழையோடு வீசும் காற்றின் வேகம் திசைகள் பொறுத்து சில வித கற்பிதங்களும் இருந்தமையை நான் கேட்டிருக்கிறேன். இன்று இத்தகைய சிந்தனைகள் பற்றிய நிலைப்பாடு என்பது காணாமல் போயிற்று. மழைநாட்களில் மழைப்பேச்சு என்ற ஒன்றினை நான் எனது கிராமத்தில் கேட்டிருக்கிறேன். அவற்றில் மழை பற்றிய கதைகள், மூடநம்பிக்கை கதைகள், பெரியவர்களின் வாழ்வில் வந்த மழை பற்றிய நினைவுகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்படும். நாங்கள் சிறுவர்களே மழைக்காலத்தில் விளையாட சில விளையாட்டுகளையும், பேசுவதற்கு சில பேச்சுகளையும் வைத்திருந்ததை மனம் நினைவு கூர்கிறது இப்போது.
எது எப்படியோ ஜன்னல் வழி மழை எனக்குள் இத்தனை நியாபகக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. எனது இரெண்டரை வயது மகளுக்கு ஜன்னல் வழி மழை ரசித்தலில் என்ன ஆர்வம் இருக்கமுடியும்? இன்னும் கற்றுக்கொள்ள, யோசிக்க எனது அறிவுக்கு எட்டாமல் நிறைய இருக்கிறது.

Comments
Post a Comment