கடைசிவரை.!!
அருந்தி வைத்த
தேநீர் கோப்பை
உண்டு வைத்த
சில்வர் தட்டு போலத்தான்
உன் நினைவும்
காய்ந்துகொண்டு
கடக்க மறுக்கிறது
பலமுறை அழைத்த அழைப்பை
சிலமுறை பார்த்த பொழுதும்
எப்போதாவது பேசுகின்ற நீ
எதைப்பற்றியும் பேசுவதில்லை
வந்தக் கடுப்பை
வார்த்தைகளாய்
கோர்க்க விழைகையில்
யார் யாரோ
அர்த்தமின்றி அழைத்து
அழிக்கிறார்கள் சிந்தனையை
உன்னை பேசவைப்பதுவும்
தொலைந்த வரிகளை
மீட்டெடுப்பதுவுமாகிய
செயல்களை செய்கின்ற நான்
காதலனாகவும் போவதில்லை
கவிஞனாகவும் போவதில்லை
கடைசிவரை.!!
Comments
Post a Comment