வேலுவம்
வேலுவம் !! :-
நகக்கண் புண்
உன்நினைவுக் காமம்
நகர்தல் அசாத்தியம்
எறும்பூர தேய்கிற கல்
நின் நினைவூற
தேய்கிற உடல்
எஞ்ஞான்றும் திரும்பிவரா
இரவில் விழித்தல்
பகலில் துயில்தல்
காதல் பசலை படர
மாறிய பருவ இலக்கணம்
சுரப்பு விகுதி
சுண்டும் பகுதி
அகத்தழகு காத்தல்
அவ்வளவுக் கடினம்
நெஞ்சம் வேறு
நினைவு வேறு
குஞ்சின் பாட்டில்
கொள்ளாது பிடி சோறு
பொடிபோட்டு
பிடி பிடித்து
கிடை கிடந்து
கீழேப் போக
கீழ்க்கண் பார்வை
யமன்.
ஐந்தடி அழகு
ஐம்புலன் ஒடுக்கம்
அசராது கடக்கின்
அமர வாழ்வு
அணைக்கும்.
நகக்கண் புண்
உன்நினைவுக் காமம்
நகர்தல் அசாத்தியம்
எறும்பூர தேய்கிற கல்
நின் நினைவூற
தேய்கிற உடல்
எஞ்ஞான்றும் திரும்பிவரா
இரவில் விழித்தல்
பகலில் துயில்தல்
காதல் பசலை படர
மாறிய பருவ இலக்கணம்
சுரப்பு விகுதி
சுண்டும் பகுதி
அகத்தழகு காத்தல்
அவ்வளவுக் கடினம்
நெஞ்சம் வேறு
நினைவு வேறு
குஞ்சின் பாட்டில்
கொள்ளாது பிடி சோறு
பொடிபோட்டு
பிடி பிடித்து
கிடை கிடந்து
கீழேப் போக
கீழ்க்கண் பார்வை
யமன்.
ஐந்தடி அழகு
ஐம்புலன் ஒடுக்கம்
அசராது கடக்கின்
அமர வாழ்வு
அணைக்கும்.
Comments
Post a Comment