தலைப்பின்றி!
உச்சி வெயிலினை
ஓரங்கட்டி
மேலாடைத் தாண்டி
தழுவுது குளிர்
மொட்டைமாடியில்
படர்ந்திருக்கும் ஈரம்
மழை வந்து
தரை நனைத்து
தடம் விட்டுச் சென்றதை
சொல்கையில்
தூரத்தில்
காக்கையோ, புறாவோ
எனத் தெரியாத
பனிப்புகையில்
இரைதேடும்
பிரஞ்கையற்று
இருபறவைகள் கூடிக்கிடந்தன
தலைவிழுந்த
மழை சிலுப்பி
மண்சாலைக் கடந்த அவள்
என்றோ என்சாலைக் கடந்த
என்னவளாகத் தெரிகையில்
இடி இடித்தது
எனக்கோ, மழைக்கோ
என்றவாறு.
Comments
Post a Comment