ஒலி
ஒலி :-
கேட்க ஆரம்பித்தது முதலில்
பிறகு கொஞ்சம்
சத்தம் கூடியது
பிரளயமான
பெரும் சத்தமாக
கேட்க ஆரம்பித்திருந்தது
தற்போது அந்தப் பெருஒலி
வாசிப்பில்
ஈடுபட்டிருந்த என்னை
வழிதவறச் செய்திருந்தது
நான் யோசிக்கும் பொழுதில்
அந்த ஒரு ஒலி
ஒலியெழுப்பியவருக்கு இந்நேரம்
உடல் உபாதை
ஏதும் வந்திருக்கலாம்
என்னும் சிந்தனையெழுப்பிய
பெருஒலியது
அறைவிட்டு வெளிவந்து
எட்டிபார்த்து
இணைத்துக் கொண்டேன்
என்னையும்
ஆச்சியும் பேத்தியும்
அதிரச் சிரித்த
அந்த நகையொலியில்.
Comments
Post a Comment