நிதர்சனத் தேடல்
நிதர்சனத் தேடல் :-

நினைவு தவிர்த்து
வாழ்தலே
நிதர்சனத் தேடலாயிருக்கிறது
இப்போது
நேற்று இரவு
துயிலுகையில்
துரிதமாய்
ஒரு கனவு நிகழ்ந்தது
சம்பந்தம் இல்லாத சிலர்
ஒரு நிகழ்வின்
தொகுப்பாக
வந்து போயினர்
எல்லோருடைய தெளிவில்லாத
முகத்தினூடே
உன்முகம் மட்டும்
பிரகாசமாய் பிரதிபலித்ததை
கண்மூடியிருந்த கனவில்
கண்கொண்டு பார்த்தேன்
உள்ளுறக்கம் சற்றே
உளுப்பப்பட்டிருந்தது
இருந்தும் இயல்பில்
விழிக்கவில்லை நான்
பிரகாசமான முகம்தாங்கி
நீ அலைந்த கனவில்
சட்டத்திற்குள் அடைபட்ட
உனது ஒரு புகைப்படமும்
இருந்தது நன்றாக
நனவில் நினைவிலிருக்கிறது
உன் நினைவு தவிர்த்து
வாழ்தலே
நிதர்சனத் தேடலாயிருக்கிறது
இப்போது.

நினைவு தவிர்த்து
வாழ்தலே
நிதர்சனத் தேடலாயிருக்கிறது
இப்போது
நேற்று இரவு
துயிலுகையில்
துரிதமாய்
ஒரு கனவு நிகழ்ந்தது
சம்பந்தம் இல்லாத சிலர்
ஒரு நிகழ்வின்
தொகுப்பாக
வந்து போயினர்
எல்லோருடைய தெளிவில்லாத
முகத்தினூடே
உன்முகம் மட்டும்
பிரகாசமாய் பிரதிபலித்ததை
கண்மூடியிருந்த கனவில்
கண்கொண்டு பார்த்தேன்
உள்ளுறக்கம் சற்றே
உளுப்பப்பட்டிருந்தது
இருந்தும் இயல்பில்
விழிக்கவில்லை நான்
பிரகாசமான முகம்தாங்கி
நீ அலைந்த கனவில்
சட்டத்திற்குள் அடைபட்ட
உனது ஒரு புகைப்படமும்
இருந்தது நன்றாக
நனவில் நினைவிலிருக்கிறது
உன் நினைவு தவிர்த்து
வாழ்தலே
நிதர்சனத் தேடலாயிருக்கிறது
இப்போது.
Comments
Post a Comment