ஒற்றை மழைத்துளி
ஒற்றை மழைத்துளி :-
நேற்றுமுதல்
நிமிடம்தவறாது
உரையாடிக்கொண்டிருந்த
அந்த ஒற்றை மழைத்துளியைக்
காணவில்லை
தேடிக்கொண்டிருக்கிறேன்
முதலில் சந்திக்கையில்
வேப்பம்பழ நுனியில்
வெற்றி நடனம்
ஆடிக் கொண்டிருந்தது
பிறந்த கொண்டாட்டமென
நினைக்கிறேன்
பிறகு புடைசூழ
மின்சாரக்கம்பியில் குழுமி
நகைத்துக் கொண்டிருந்ததைப்
பார்த்து கையசைத்துவிட்டு
வந்தேன்
மதியம் துணி காயவைக்கும்
கொடியில் காய்ந்து கொண்டு
நட்பில் கனல் மூட்டிக்கொண்டிருந்தது
சற்று முன்வரை
அறையின் சன்னல்
தாழ்வார
நெகிழிக்குழாயில்
வழிந்து வந்து
பேசிக்கொண்டிருந்தது
என்னுருவாக்கமும்
அதனுருவாக்க்கவும்
இன்னும் இன்னும்
எத்தனையோ
பேசிக்களித்தோம்
எல்லா இடங்களிலும்
நானும், நல்ல மழைத்துளியும்
தேநீர் அருந்திவிட்டு
திரும்பி வருகிறேன்
எங்கேயும் செல்லாமல்
இங்கேயே நில்
என்று சென்று திரும்புகையில்
காணவில்லை தோழித்துளியை
சற்றே உருண்டையாய்
நிறமல்லாதவொரு நிறத்தில்
சிரித்தவாரே
எங்கேனும்
என் மழைத்துளியைப் பார்க்கின்
எனக்குத் தெரிவியுங்கள்
ஆனால் உங்களுக்கு
அவளை பார்க்கும்
அளவிற்கு
அருமை நேரமிருக்குமா
என்பதுதான் தெரியவில்லை.
நிமிடம்தவறாது
உரையாடிக்கொண்டிருந்த
அந்த ஒற்றை மழைத்துளியைக்
காணவில்லை
தேடிக்கொண்டிருக்கிறேன்
முதலில் சந்திக்கையில்
வேப்பம்பழ நுனியில்
வெற்றி நடனம்
ஆடிக் கொண்டிருந்தது
பிறந்த கொண்டாட்டமென
நினைக்கிறேன்
பிறகு புடைசூழ
மின்சாரக்கம்பியில் குழுமி
நகைத்துக் கொண்டிருந்ததைப்
பார்த்து கையசைத்துவிட்டு
வந்தேன்
மதியம் துணி காயவைக்கும்
கொடியில் காய்ந்து கொண்டு
நட்பில் கனல் மூட்டிக்கொண்டிருந்தது
சற்று முன்வரை
அறையின் சன்னல்
தாழ்வார
நெகிழிக்குழாயில்
வழிந்து வந்து
பேசிக்கொண்டிருந்தது
என்னுருவாக்கமும்
அதனுருவாக்க்கவும்
இன்னும் இன்னும்
எத்தனையோ
பேசிக்களித்தோம்
எல்லா இடங்களிலும்
நானும், நல்ல மழைத்துளியும்
தேநீர் அருந்திவிட்டு
திரும்பி வருகிறேன்
எங்கேயும் செல்லாமல்
இங்கேயே நில்
என்று சென்று திரும்புகையில்
காணவில்லை தோழித்துளியை
சற்றே உருண்டையாய்
நிறமல்லாதவொரு நிறத்தில்
சிரித்தவாரே
எங்கேனும்
என் மழைத்துளியைப் பார்க்கின்
எனக்குத் தெரிவியுங்கள்
ஆனால் உங்களுக்கு
அவளை பார்க்கும்
அளவிற்கு
அருமை நேரமிருக்குமா
என்பதுதான் தெரியவில்லை.
Comments
Post a Comment